திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 771

மூன்றாம் தந்திரம்15. ஆயுள் பரிட்சை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்ஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.

உரை

உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தின் ஓசையில் இறைவனை உணர்ந்து, எண்ணம் இல்லாத நிலையை கடந்தவர், ஈசனை நினைத்து அவருடனே கலந்திருப்பார். அவ்வாறு கலந்திருப்பவர் நெஞ்சினுள் ஈசன் உணர்வு வடிவாய் நிற்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தின் ஓசையில் இறைவனை உணர்ந்து,

  • வரி 2

    எண்ணம் இல்லாத நிலையையும் கடந்தவர், ஈசனை நினைத்து அவருடனே கலந்திருப்பார்.

  • வரி 3

    அவ்வாறு கலந்திருப்பவரின் நெஞ்சினுள்,

  • வரி 4

    ஈசன் உணர்வு வடிவாய் நிற்பார்.

திருமந்திரம் பாடல் #771

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout