தொடர்ந்து படிக்கread this section continuously
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்திகுறிப்பது கூடிய கோலக் குரம்பைப்பழப்பதி யாவது பற்றறும் பாசம்அழப்படி செய்வார்க் ககலும் மதியே.
உரைmeaning
உயிர்கள் பிறக்க வேண்டும் என நந்தி பெருமான் தம் திருவுள்ளக் குறிப்பால் அருளினார்; அதனால் மாயையால் இந்த உடல் உயிர்களுக்கு அமைந்தது. தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் இந்த உடல், பாசம் என்னும் பற்றை அறுப்பதற்கான கருவியாக இருக்கிறது. இந்த அழகிய உடல் பிஞ்சாய், காயாய், செங்காயாய் ஆகி, முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்துவிடும். அப்படி விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்துபோகாமல் அவற்றை விலக்கும் முறைகளில் பழகினால், பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.
Nandi, by his own gracious intent, ordained that living beings must be born, and by that intent, through maya, this body came to belong to living beings. This body, which has come down continuously from ancient times, is itself the instrument for cutting off the attachment called pasam. This beautiful body becomes a bud, then a green fruit, then a ripening fruit, and in the end falls, ripened into a fruit, and perishes. If, before it falls that way, one does not sink deep into attachments but trains oneself in ways that loosen them, the attachment falls away, true awareness grows, and wisdom increases.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் பிறக்க வேண்டும் என நந்தி பெருமான் தம் திருவுள்ளக் குறிப்பால் அருளினார்; அதனால் மாயையால் இந்த உடல் உயிர்களுக்கு அமைந்தது.
Nandi, by his own gracious intent, ordained that living beings must be born, and by that intent, through maya, this body came to belong to living beings.
- வரி 2Line 2
தொன்று தொட்டுத் தொடர்ந்துவரும் இந்த உடல், பாசம் என்னும் பற்றை அறுப்பதற்கான கருவியாக இருக்கிறது.
This body, which has come down continuously from ancient times, is itself the instrument for cutting off the attachment called pasam.
- வரி 3Line 3
இந்த அழகிய உடல் பிஞ்சாய், காயாய், செங்காயாய் ஆகி, முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்துவிடும்.
This beautiful body becomes a bud, then a green fruit, then a ripening fruit, and in the end falls, ripened into a fruit, and perishes.
- வரி 4Line 4
அப்படி விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்துபோகாமல் அவற்றை விலக்கும் முறைகளில் பழகினால், பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.
If, before it falls that way, one does not sink deep into attachments but trains oneself in ways that loosen them, the attachment falls away, true awareness grows, and wisdom increases.
திருமந்திரம் பாடல் #789





