தொடர்ந்து படிக்கread this section continuously
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
உரைmeaning
வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் மூச்சு இடப் பக்க நாடி வழியாக இயங்க வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மூச்சு வலப் பக்க நாடி வழியே இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக்கிழமையில் மூச்சு இடப் பக்கத்தில் இயங்க வேண்டும். தேய்பிறை வியாழக்கிழமையில் மூச்சு வலப் பக்கத்தில் இயங்க வேண்டும்.
On Friday, Monday and Wednesday, the breath should move through the channel on the left side. On Saturday, Sunday and Tuesday, the breath should move through the channel on the right side. On a waxing-moon Thursday the breath should move on the left side. On a waning-moon Thursday it should move on the right side.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் மூச்சு இடப் பக்க நாடி வழியாக இயங்க வேண்டும்.
On Friday, Monday and Wednesday, the breath should move through the channel on the left side.
- வரி 2Line 2
சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளில் மூச்சு வலப் பக்க நாடி வழியே இயங்க வேண்டும்.
On Saturday, Sunday and Tuesday, the breath should move through the channel on the right side.
- வரி 3Line 3
வளர்பிறை வியாழக்கிழமையில் மூச்சு இடப் பக்கத்தில் இயங்க வேண்டும்.
On a waxing-moon Thursday, the breath should move on the left side.
- வரி 4Line 4
தேய்பிறை வியாழக்கிழமையில் மூச்சு வலப் பக்கத்தில் இயங்க வேண்டும்.
On a waning-moon Thursday, the breath should move on the right side.
திருமந்திரம் பாடல் #790





