வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்றுவள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.
செவ்வாய் வியாழன் சனிஞாயி றேஎன்னும்இவ்வா றறிகின்ற யோகி இறைவனேஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.
மாறி வருமிரு பான்மதி வெய்யவன்ஏறி இழியும் இடைபிங் கலையிடைஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
உதித்து வலத்திடம் போகின்ற போதுஅதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்உதித்தது வேமிக யோடிடு மாகில்உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடிஅடுகின்ற வாயுவை அந்தணன் கூடிஇடுகின்ற வாறுசென் றின்பணி சேரமுடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.
ஆயும் பொருளும் அணிமலர் மேலதுவாயு விதமும் பதினா றுளவலிபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்ஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #790
1 / 7




