திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 791

தொடர்ந்து படிக்கread this section continuously

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்றுவள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.

உரை

இயல்பாகவோ, பயிற்சியினாலோ, திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடப்பக்க நாடி வழியாக இயங்கினால், ஞானம் பெறுவதற்கு வாயிலாக இருக்கும் இந்த உடலுக்கு எந்தக் குறையும் அழிவும் ஏற்படாது என்று அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.

வரி வாரியாக

  • வரி 1

    இயல்பாகவோ, பயிற்சியினாலோ, திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடப்பக்க நாடி வழியாக இயங்கினால்,

  • வரி 2

    ஞானம் பெறுவதற்கு வாயிலாக இருக்கும் இந்த உடலுக்கு எந்தக் குறையும் அழிவும் ஏற்படாது.

  • வரி 3

    இதை அருள் வள்ளலாகிய நந்தி பெருமான்,

  • வரி 4

    அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.

திருமந்திரம் பாடல் #791

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout