தொடர்ந்து படிக்கread this section continuously
மாறி வருமிரு பான்மதி வெய்யவன்ஏறி இழியும் இடைபிங் கலையிடைஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
உரைmeaning
சந்திரனும் சூரியனும் போன்று, மூச்சு மாறி மாறி இடப் பக்கமும் வலப் பக்கமும் இயங்கும். இடப் பக்கத்தில் ஏறி வலப் பக்கத்தில் இறங்கும்; வலப் பக்கத்தில் ஏறி இடப் பக்கத்தில் இறங்கும். நடுவே ஒரு நிலையிலும் மூச்சு ஊர்ந்து செல்லும். நாசிகள் வழியே இயங்கும் இந்த மூச்சிலேயே சிவம் இருக்கிறது என்பதை அறிந்து தெளியலாம்.
Like the moon and the sun, the breath moves changing again and again on the left side and the right. It rises on the left and falls on the right; it rises on the right and falls on the left. It also moves gliding through a middle course. One may come to know clearly that Shiva himself is present in this very breath that moves through the nostrils.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சந்திரனும் சூரியனும் போன்று, மூச்சு மாறி மாறி இடப் பக்கமும் வலப் பக்கமும் இயங்கும்.
Like the moon and the sun, the breath moves changing again and again on the left side and the right.
- வரி 2Line 2
இடப் பக்கத்தில் ஏறி வலப் பக்கத்தில் இறங்கும்; வலப் பக்கத்தில் ஏறி இடப் பக்கத்தில் இறங்கும்.
It rises on the left and falls on the right; it rises on the right and falls on the left.
- வரி 3Line 3
நடுவே ஒரு நிலையிலும் மூச்சு ஊர்ந்து செல்லும்.
It also moves gliding through a middle course.
- வரி 4Line 4
நாசிகள் வழியே இயங்கும் இந்த மூச்சிலேயே சிவம் இருக்கிறது என்பதை அறிந்து தெளியலாம்.
One may come to know clearly that Shiva himself is present in this very breath that moves through the nostrils.
திருமந்திரம் பாடல் #793





