திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 795

தொடர்ந்து படிக்கread this section continuously

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடிஅடுகின்ற வாயுவை அந்தணன் கூடிஇடுகின்ற வாறுசென் றின்பணி சேரமுடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

உரை

மூச்சுக்காற்று நடு நாடியில் நில்லாமல் இடம் வலமாக மாறி மாறி இயங்கும்போது, உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் அனைத்தும் கூடுகின்ற நடு நாடியில் ஒன்றுசேர்த்தால், அந்த நடு நாடியின் உச்சியில் விளக்கின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

வரி வாரியாக

  • வரி 1

    மூச்சுக்காற்று நடு நாடியில் நில்லாமல் இடம் வலமாக மாறி மாறி இயங்கும்போது,

  • வரி 2

    உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும்.

  • வரி 3

    யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் அனைத்தும் கூடுகின்ற நடு நாடியில் ஒன்றுசேர்த்தால்,

  • வரி 4

    அந்த நடு நாடியின் உச்சியில் விளக்கின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

திருமந்திரம் பாடல் #795

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout