தொடர்ந்து படிக்கread this section continuously
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.
உரைmeaning
மூச்சுக்காற்று ஒரே பாதையில் இருபத்தேழு நாட்கள் சென்றால், அதன்பின் இன்னும் ஒரு மாத காலமே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டலாம். இருபத்தெட்டு நாட்கள் சென்றால், அதன்பின் பத்தே நாட்கள்தான் வாழ்நாள் என்று மெய்ப்பித்துக் காட்டலாம்.
If the breath moves along a single path for twenty-seven days, it can be proved that only one more month of life remains after that. If it moves for twenty-eight days, it can be proved that only ten more days of life remain after that.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மூச்சுக்காற்று ஒரே பாதையில் இருபத்தேழு நாட்கள் சென்றால்,
If the breath moves along a single path for twenty-seven days,
- வரி 2Line 2
அதன்பின் இன்னும் ஒரு மாத காலமே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டலாம்.
it can be proved that only one more month of life remains after that.
- வரி 3Line 3
இருபத்தெட்டு நாட்கள் சென்றால்,
If it moves for twenty-eight days,
- வரி 4Line 4
அதன்பின் பத்தே நாட்கள்தான் வாழ்நாள் என்று மெய்ப்பித்துக் காட்டலாம்.
it can be proved that only ten more days of life remain after that.
திருமந்திரம் பாடல் #782





