தொடர்ந்து படிக்கread this section continuously
தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லைதலைவ னிடம்வல மாயிடில் தையல்தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்தலைவ னிடம்வலந் தன்வழி நூறே.
உரைmeaning
இடம்-வலமாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்துச் செலுத்தி இறைவனை அடையும் பிராணாயாமத்தைச் சரியாகச் செய்பவர்கள் அரிது. இவ்வாறு சாதனை செய்து கைகூடினால், சக்தியாய் விளங்கும் சிவனை உணரலாம். இப்பயிற்சியை நாள்தோறும் ஐந்து நாழிகை செய்தால், நூறு வயதைக் கடந்தும் வாழலாம்.
Rare are those who correctly perform the pranayama that draws the breath in and sends it left and right to reach the Lord. If this practice is undertaken and succeeds, one may realize Shiva who stands as Shakti. If this practice is done for five nazhigai every day, one may live beyond a hundred years.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இடம்-வலமாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்துச் செலுத்தி இறைவனை அடையும் பிராணாயாமத்தைச் சரியாகச் செய்பவர்கள் அரிது.
Rare are those who correctly perform the pranayama that draws the breath in and sends it left and right to reach the Lord.
- வரி 2Line 2
இவ்வாறு சாதனை செய்து கைகூடினால், சக்தியாய் விளங்கும் சிவனை உணரலாம்.
If this practice is undertaken and succeeds, one may realize Shiva who stands as Shakti.
- வரி 3Line 3
இப்பயிற்சியை நாள்தோறும் ஐந்து நாழிகை செய்தால்,
If this practice is done for five nazhigai every day,
- வரி 4Line 4
நூறு வயதைக் கடந்தும் வாழலாம்.
one may live beyond a hundred years.
திருமந்திரம் பாடல் #773





