நனவின் நனவாகி நாலாம் துரியம்தனதுயிர் தெம்பதம் ஆமாறு போலவினையறு சீவன் நனவாதி யாகத்தனைய பரதுரி யந்தற் பதமே.
தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்பொல்நம்பிய மூன்றாம் துரியத்து நல்நாமம்அம்புலி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்திஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்Yமூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.
ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்றுஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.
சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகியசுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்தசத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்துஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டுவேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்குஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புளமூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக்காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.
உலகம் புடைபெயர்ந்து ஊழியம் போனநிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாயபலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்அளவும் பெருமையும் ஆரறி வாரே.
பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்துஅருவாய் உருவாய் அருவுரு வாகிக்குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மைஉருவாய் உடனிருந்து ஒன்றாய்அன் றாமே.
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்துமணிஎன வாய்நின்ற வாறுஅது போலத்தணிமுச் சொருபாதி சத்தியாதி சாரப்பணிவித்த பேர்நந்தி பாதம்பற்றாயே.
கல்லொளி மாநிறம் சோபை கதிர்தட்டநல்ல மணியொன்றின் நாடிஒண் முப்பதும்சொல்லறும் முப்பாழில் சொல்லறு பேருரைத்துஅல்அறும் முத்திராந் தத்துஅனு பூதியே.
உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதிநடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ்விடம்தரு வாசலை மேல்திற வீரே.
இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்திடமது போலச் சிவபர சீவர்உடனுரை பேதமும் ஒன்றென லாமே.
ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பிவளியை வளிசெய்து வாய்த்திட வாங்கிவெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்தெளியத் தெளியும் சிவபதம் தானே.
முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்திமிக்க மனோன்மணி வேறே தனித்துஏகஒக்குமது உன்மணி ஓதுஉள் சமாதியே.
தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றலேநிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்சொற்பத மாகும் தொந்தத் தசியே.
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதிதொந்தத் தசிமூன்றில் தொல்கா மதமாதிவந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.
தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியேஅந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டுஅந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்துஉந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே.
வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்துஉய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தைமெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்துஅத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்அம்புரை தன்னில் உதிக்கும் அசிபதம்நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.
ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்துஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவுஆகிய சீவன் பரசிவன் ஆமே.
தாமதம் காமியம் ஆசித் தகுணம்மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடுஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்காரிய காரண வாதனை கண்டறும்சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.
மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்பதியெனும் நந்தி பதமது கூடக்கதியெனப் பாழை கடந்து அந்தக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.
துரியம் அடங்கிய சொல்லறும் பாழைஅரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்அரிய பரம்பரம் என்றே துதிக்கும்அருநிலம் என்பதை யார்அறி வாரே.
ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டுவேறா கயபரை யாவென்று மெய்ப்பரன்ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோதேறாச் சிவாய நமவெனத் தேறிலே.
உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லைஉள்ளமும் இல்லை உருவில்லை தானே.
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்பற்றும் பரோபதி ஏழும் பகருரைஉற்றிடும் காரிய காரணத் தோடறஅற்றிட அச்சிவ மாகும் அணுவனே.
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டுவேறாய் நனவு மிகுந்த கனாநனாஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப்பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.
அகாரம் உயிரே உகாரம் பரமேமகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்சிகாரம் சிவமே வகாரம் பரமேயகாரம் உயிரென்று அறையலும் ஆமே.
உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்றுஅயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்துஉயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றிவியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே.
காரியம் ஏழில் கலக்கும் கடும்பசுகாரணம் ஏழில் கலக்கும் பரசிவன்காரிய காரணம் கற்பனை சொற்பதப்பாரறும் பாழில் பராபரத் தானே.
முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமேபத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலேசித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்காரணம் ஏழும் கரக்கும் கடுவெளிகாரிய காரண வாதனைப் பற்றறப்பாரண வும் உப சாந்தப் பரிசிதே.
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரிமன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத்தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.
ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் நீக்குதல்பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்திகூறாத சாக்கிரா தீதம் குருபரன்பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே.
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய்ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத்தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடேஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே.
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்றுஉரையுணர்ந்து ஆரமுது ஒக்க உணர்ந்துளோன்கரைகண் டானுரை அற்ற கணக்கிலே.
பிறையுள் கிடந்த முயலை எறிவான்அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்கறைமணி கண்டனக் காண்குற மாட்டார்நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.
கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்கபெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சேஅருந்தர அலைகடல் ஆறசென் றாலே.
கருதலர் மாளக் கருவாயில் நின்றபொருதலைச் செய்வது புல்லறி வாண்மைமருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்தருவலர் கேட்ட தனியும்ப ராமே.
பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்கணம்பதி னெட்டும் கழலடி காணவணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.
என்னிலும் என்னுயி ராய இறைவனைப்பொன்னிலும் மாமணி யாய புனிதனைமின்னிய எவ்வுய ராய விகிர் தனைஉன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனைஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்துஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரைவிண்அறி வாளர் விரும்புகின் றாரே.
விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்கண்ணற வுள்ளே கருதிடின் காலையில்எண்உற வாசமுப் போதும் இயற்றிநீபண்ணிடில் தன்மை பராபர னாமே.
ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன்கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்பொன்றாத போது புனைபுக ழானே.
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடிஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்காற்றின் விளக்கது காயம் மயக்குறும்அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



