நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியைஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லைகூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே.
ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண்டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்குவானகஞ் செய்யு மறவனு மாமே.
மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்காமல மற்றார் அமைவுபெற் றாரே.
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டிதமுற்ற பாச இருளைத் துரந்துமதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கேதிதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.
சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்துதிக்கும் நிருதி வருணன்நல் வாயுமதிக்கும் குபேரன் வடதிசை யீசன்நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.
ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்மருங்கிய மாயா புரியத னுள்ளேசுருங்கிய தண்டின் சுழுனையி னூடேஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே.
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டுநூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்கூறே குவிமுலைக் கொண்பனை யாளொடும்வேறே யிருக்கும் விழுபொருள் தானே.
திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானைவகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்துமுகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.
ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்தாழ்வது வான தனித்தன்மை தானே.
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே
புரியும் உலகினிற் பூண்டவெட் டானைதிரியுங் களிற்றொடு தேவர் குழாமும்எரியு மழையும் இயங்கும் வெளியும்பரியுமா காசத்திற் பற்றது தானே.
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டுசேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்துநின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்சென்றும் இருந்தும் திருவடை யோரே.
தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன்பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.
நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்தவமான சத்திய ஞானப் பொதுவிற்றுவமார் துரியஞ் சொருபம தாமே.
சிவமான சிந்தையிற் சீவன் சிதையபவமான மும்மலம் பாறிப் பறியநவமான அந்தத்தின் நற்சிவ போதந்தவமான மவையாகித் தானல்ல வாகுமே.
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுளபின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே.
உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடிஅகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்இகந்தன வல்வினை யோடறுத் தானே.
நலம்பல காலந் தொகுத்தன நீளங்குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்பலம்பல பன்னிரு கால நினையும்நிலம்பல வாறின் நீர்மையன் றானே.
ஆதி பராபர மாகும் பராபரைசோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்ஓதுங் கமைமாயே யோரிரண் டோ ரமுத்திநீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.
தேராத சிந்தை தெளியத் தெளிவித்துவேறாத நரக சுவர்க்கமும் மேதினிஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானிநன்பாற் பயிலு நவதத் துவமாதிஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.
நாசி நுனியினின் நான்குமூ விரலிடைஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்பேசி யிருக்கும் பெருமறை யம்மறைகூசி யிருக்குங் குணமது வாமே.
கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிப்கருவினை யாவது கண்டகன் றன்பின்புரிவன கன்மக் கயத்துட் புகுமே.
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்மாயை மறைய மறையவல் லார்கட்குக்காயமும் இல்லை கருத்தில்லை தானே.
மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்துதாழ அடைப்பது தன்வலி யாமே.
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்காயத்துள் நின்ற கருத்தறி யாரே.
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்ஆசூச மானிடம் ஆசூச மாமே.
ஆசூச மில்லை அருநிய மத்தருக்குஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்குஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்குஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.
வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச்சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்தூய்மணி தூயனல் தூரறி வாரில்லைதூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்தூய்மணி தூயனல் தூயவு மாமே.
தூயது வாளா வைத்தது தூநெறிதூயது வாளா நாதன் திருநாமம்தூயது வாளா அட்டமா சித்தியும்தூயது வாளா தூயடிச் சொல்லே.
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தைஅருளது போற்றும் அடியவ ரன்றிச்சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.
வினையா மசத்து விளைவ துணரார்வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்வினையாளார் மிக்க விளைவறி யாரே.
பரகதி யுண்டென இல்லையென் போர்கள்நரகதி செல்வது ஞாலம் அறியும்இரகதி செய்திடு வார்கடை தோறும்துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டுநாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்பாடகில் லாரவன் செய்த பரிசறிந்தாடவல் லாரவர் பேறெது வாமே.
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணிஅறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன்இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே
திடரடை நில்லாத நீர்போல் ஆங்கேஉடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்அடலிடை வண்ணனும் அங்குநின் றானே.
தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும்போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்காடும் மலையுங் கழனி கடந்தோறும்ஊடும் உருவினை யுன்னிகி லாரே.
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்போவார் குடக்கும் குணக்கும் குறுவழிநாவினின் மந்திர மென்று நடுவங்கிவேவது செய்து விளங்கிடு வீரே.
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார்தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்சினக்குறப் பேசின தீவினை யாளர்தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.
விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.
வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தனவில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்கல்கலன் என்னக் கதிரெதி யாமே.
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்தாவு பரதுரி யத்தனில் தற்பதம்மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதமோவி விடும் தத் துவமசி உண்மையே.
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்துவீறான தொந்தத் தசிதத்வ மசியே.
ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்துஆகிய விட்டு விடாத விலக்கணைத்துஆருப சாந்தமே தொந்தத் தசியென்பஆகிய சீவன் பரன்சிவ னாமே.
துவந்தத் தசியே தொந்தத் தசியும்அவைமன்னா வந்து வயத்தேகமானதவமுறு தத்துவ மசிவே தாந்தசிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



