திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2172–2221

எட்டாம் தந்திரம் பாடல் 2172–2221 (50 பாடல்கள்)

நாலா றுடன்புருடன் நல்தத் துவமுடன்வேறான ஐ ஐந்து மெய்ப்புரு டன்பரன்கூறா வியோமம் பரம்எனக் கொண்டனன்வேறான நாலேழு வேதாந்த தத்துவமே.

ஏலங்கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலைகோலங்கொண்டு ஆங்கே குணத்துடன் புக்குமூலங்கொண்டு ஆங்கே முறுக்கிமுக் கோணிலும்காலங்கொண் டான்அடி காணலும் ஆமே.

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும்கூடிய காமம் குளிக்கும் இரதமும்நாடிய நல்ல மனமும் உடலிலே.

ஆவன ஆக அழிவ அழிவனபோவன போவ புகுவ புகுவனகாவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்ஏவன செய்யும் இலங்கிழை யோனே.

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்தத்துவ நாலேழ் எனஉன்னத் தக்கதே.

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்துவிளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.

நாலொரு கோடியே நாற்பத்தொண் ணாயிரம்மேலுமோர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்பாலவை தொண்ணூறோடு ஆறுள் படும்அவைகோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.

ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொதுஎன்பர்ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்குஆகின்ற நாலாறுஐ ஐந்துமாயா வாதிக்கே.

தத்துவ மானது தன்வழி நின்றிடில்வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்பொய்த்துவ மாம்அவை போயிடும் அவ்வழிதத்துவம் ஆவது அகார எழுத்தே.

அறிவொன் றிலாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்அறிகின்றாய் நீஎன்று அருள்செய்தார் நந்திஅறிகின்ற நானென்று அறிந்து கொண்டேனே.

சாக்கிர சாக்கிர மாதி தனில்ஐந்தும்ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதிபோக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறுநீக்கி நெறிநின்றுஒன்று ஆகியே நிற்குமே.

ஆணவ மாதி மலம்ஐந்து அவரோனுக்குஆணவ மாதிநான் காம்மாற்கு அரனுக்குஆணவ மாதிமூன்று ஈசர்க்கு இரண்டென்பஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே.

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடிமெய்த்தரு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினிஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்றுவைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்துஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்கூடுவர் கூடிக் குறிவழி யேசென்றுதேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கிஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்துஅதுதேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயவே.

நானவாதி தூலமே சூக்கப் பகுதிஅனதான ஐஐந்தும் விந்துவின் சத்திதனதாம் உயிர்விந்து தான்நின்று போந்துகனவா நனவில் கலந்ததுஇவ் வாறே.

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்நனவில் கனவுஓட நன்செய்தி யானதே.

செறியுங் கிரியை சிவதத் துவமாம்பிறிவில் சுகயோகம் பேரருள் கல்விகுறிதல் திருமேனி குணம்பல வாகும்அறிவில் சராசரம் அண்டத் தளவே.

ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்ஏதம்இல் ஈசன்நல் வித்தியா தத்துவம்போதம் கலைகாலம் நியதிமா மாயைநீதிஈ றாக நிறுத்தினன் என்னே.

தேச திகழ்சிவம் சத்தி சதாசிவம்ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்மாசகல் வித்தை நியதி மகாமாயைஆசில் புருடாதி ஆன்மாஈ றாறே.

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்காணும் முளைக்குத் தவிடுஉமி ஆன்மாவும்தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடில்பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

உடல்இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்அடலொன்று அகந்தை அறியாமை மன்னிக்கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

தன்தெரியாத அதீதம்தற்கு ஆணவம்சொல்தெரி கின்ற துரியம்சொல் காமியம்பெற்ற சுழுத்திப்பின் பேசுறும் காதலாம்மற்றது உண்டிக் கனவுநன வாதலே.

நனவில் கனவுஇல்லை ஐந்து நனவில்கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்திதனலுண் பகுதியே தற்கூட்டும் மாயைநனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

ஆறாறில் ஐஐந்து அகல நனாநனாஆறாம் அவைவிட ஆகும் நனாக்கனாவேறான ஐந்தும் விடவே நனாவினில்ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே.

மாயையில் வந்த புருடன் துரியத்தில்ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகிச்சேயதே வலவித் துடன் செல்லச் சென்றக்கால்ஆய தனுவின் பயனில்லை யாமே.

அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மாஅதீதத் துரியம் அதனால் புரிந்தால்அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்முதிய அனலில் துரியத்து முற்றுமே.

ஐஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்கைகண்ட ஐஐந்தில் கண்டம் கனாஎன்பர்பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையின்மெய்கண்டவன்உந்தி மேவல் இருவரே.

புரியட் டகமே பொருந்தல் நனவுபுரியட் டகந்தன்னில் மூன்று கனவுபுரியட் டகத்தில் இரண்டு கழுத்திபுரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

நனவில் நனவு புனலில் வழக்கம்நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்நனவிற் சுழுத்திஉள் நாடல் இலாமைநனவில் துரியம் அதீதத்து நந்தியே.

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்கனவினில் கண்டு மறத்தல் கனவாம்கனவில் சுழுத்தியும் காணாமை காணல்அனுமாதி செய்தலில் ஆன துரியமே.

சுழுத்தி நனவுஒன்றும் தோன்றாமை தோன்றல்சுழுத்தி கனவுஅதன் உண்மை சுழுத்தியில்சுழுத்தி அறிவுஅறி வாலே அழிகைசுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

துரிய நனவாம் இதமுணர் போதம்துரியக் கனவாம் அகமுணர் போதம்துரியச் சுழுத்தி வியோமம் துரியம்துரியம் பரமெனத் கோன்றிடும் தானே.

அறிவுஅறி கின்ற அறிவு நனவாம்அறிவுஅறி யாமை அடையக் கனவாம்அறிவுஅறி அவ்அறி யாமை சுழுத்திஅறிவுஅறி வாகும் ஆன துரியமே.

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டுஞானம் தனதுரு வாகி நயந்தபின்தான்எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டுமேல்நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே.

ஐஐந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்மெய்யும்பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயைஐயமும் தான்அவன் அத்துரி யத்தனே.

ஈதென்று அறிந்திலன் இத்தனை காலமும்ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்ஈதென்று அறியும் இயல்புடை யோனே.

உயிர்க்குஉயி ராகி உருவாய் அருவாய்அயல்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்நயப்புறு சத்தியும் நாதன் உலகாதிஇயற்பின்றி எல்லாம் இருண்மூட மாமே.

சத்தி இராகத்தில் தான்நல் உயிராகிஒத்துறி பாச மலம்ஐந்தோடு ஆறாறுதத்துவ பேதம் சமைத்துக் கருவியும்வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மைசாக்கிரா தீதம் துரியத்தில் தானுறச்சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான்விடாச்சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

மலக்கலப் பாலே மறைந்தது சத்திமலக்கலப் பாலே மறைந்தது ஞானம்மலக்கலப் பாலே மறைந்தனன் தாணுமலக்கலப்பு அற்றால் மதியொளி யாமே.

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்றுநகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்குவகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்துபகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

கதறு பதினெட்டுக் கண்களும் போகச்சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்கனவகத் தேஉள் கரணங்க ளோடுமுனவகத் தேநின்று உதறியுட் புக்குநினைவகத்து இன்றிச் சுழுத்திநின் றானே.

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்ஒன்றி உலகின் நியமாதிகள் உற்றுச்சென்று துரியாதீ தத்தே சிலகாலம்நின்று பரனாய் நின்மல னாமே.

ஆனஅவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்தான்உலகு உண்டு சதாசிவ மாசத்திமேனிகள் ஐந்தும்போல் விட்டுச் சிவமாகிமோனம் அடைந்தொளி மூலத் னாமே.

மண்டலம் மூன்றினுள் மாயநன் நாடனைக்கண்டுகொண்டு உள்ளே கருதிக் கழிகின்றவிண்டவர் தாமரை மேலொன்றும் கீழாகஅண்டமும் தானாய் அகத்தினுள் ஆமே.

போதறி யாது புலம்பின புள்ளினம்மாது அறி யாவகை நின்று மயங்கினவேதுஅறி யாவணம் நின்றனன் எம்இறைசூதறி வாருச்சி சூடிநின் றாரே.

கருத்தறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கேபொருந்தறிந் தேன்புவ னாபதி நாடித்திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானைபருத்தறிந் தேன்மனம் மன்னிநின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

எட்டாம் தந்திரம்பாடல் 2172

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com