ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்னத்தான விளக்கொளி யாம்மூல சாதனத்துஆன விதிமூலத் தானத்தில் அவ்விளக்குஏனை மதிமண்ட லம்கொண்டு எரியுமே.
உள்நாடும் ஐவர்க்கு மண்டை ஓதுங்கியவிண்நாட நின்ற வெளியை வினவுறில்அண்ணாந்து பார்த்துஐவர் கூடிய சந்தியில்கண்நாடி காணும் கருத்ததுஎன் றானே.
அறியாத வற்றை அறிவான் அறிவான்அறிவான் அறியாதான் தன்னறிவு ஆகான்அறியா தவத்தை அறிவானைக் கூட்டிஅறியாது அறிவானை யார்அறிவாரே.
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்அரியன தூடணம் அந்தண வாதிபெரியன கால பரம்பின் துரியம்அரிய அதீதம் அதீதத்த தாமே.
மாயையிற் சேதனன் மன்னும் பகுதியோன்மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்கேவல மாகும் சகலமா யோனியுள்தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.
தன்னை அறிசுத்தன் தற்கேவ லன்தானும்பின்னம் உறநின்ற பேத சகலனும்மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்துன்னவர் தத்தம் தொழில்கள் வாகவே.
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்தானே தனக்கு மறுமையும் இம்மையும்தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்தானே தனக்குத் தலைவனும் ஆமே.
ஆமுயிர் கேவலம் மாமாயை யின்நடந்துஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுகாமியம் மாமேய மும்கல வாநிற்பத்தாம்உறு பாசம் சகலத்து ஆமே.
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்நிகரில் மலரோன்மால் நீடுபல் தேவர்கள்நிகழ்நரர் சீடம் அந்தமும் ஆமே.
தாவிய மாயையில் தங்கும் பிரளயம்மேவிய மற்றது உடம்பாய்மிக் குள்ளனஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்ஆவயின் நூற்றெட்டு உருத்திர ராமே.
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.
ஆம்அவ ரில்சிவ னார்அருள் பெற்றுளோர்போம்மலந் தன்னால் புகழ்விந்து நாதம்விட்டுஒம்மய மாகி ஒடுங்கலின் நின்மலம்தோம்அறும் சுத்த அவத்தைத் தொழிலே.
ஒரினும் மூவகை நால்வகை யும்உளதேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சைசார்இய லாயவை தாமே தணப்பவைவாரிவைத்து ஈசன் மலம்அறுத் தானே.
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டகன்றுஎய்யாமை நீங்கவே எய்தவன் தானாகிமெய்யாம் சராசர மாய்வெளி தன்னுட்புக்குஎய்தாமல் எய்தும்சுத் தாவத்தை என்பதே.
அனாதி பசுவியாத்தி யாகும் இவனைஅனாதியில் வந்த மலம்ஐந்தால் ஆட்டிஅனாதியில் கேவலம் அச்சக லத்திட்டுஅனாதி பிறப்புறச் சுத்தத்துள் ஆகுமே.
அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறுதந்தோர்தம் சுத்தகே வலத்தற்ற தற்பரத்தின்பால் துரியத் திடையே அறிவுறத்தன்பால் தனையறி தத்துவந் தானே.
ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்மெய்கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்துய்யஅவ் வித்தை முதன்மூன்றும் தொல்சத்திஐயன் சிவன்சத்தி யாம்தோற்றம் அவ்வாறே.
ஐஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கியும்மெய்கண்ட மேல்மூன்றும் மேவுமெய் யோகத்தில்கைகண்ட சத்தி சிவபாகத் தேகாணஎய்யும் படியடங்கும் நாலேழ் எய்தியே.
ஆணவத் தார்ஒன்று அறியாத கேவலர்பேணிய மாயைப் பிரளயா கலராகும்காணும் உருவினர் காணாமை காண்பவேபூணும் சகலர்முப் பாசமும் புக்கோரே.
ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்பேணிய மாயை பிரளயா கலருக்கேஆணவ மாயையும் கன்மம் மூன்றுமேகாணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே
கேவலம் தன்னில் கிளர்ந்தவிஞ் ஞாகலர்கேவலம் தன்னில் கிளர்விந்து சத்தியால்பூவயின் கேவலத்து அச்சக லத்தையும்மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.
மாயையில் மன்னும் பிரளயா கலர்வந்துமாயையும் தோன்றா வகைநிற்க ஆணவமாய சகலத்துக் காமிய மாமாயைஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்அம்மெய்ச் சகலத்தர் தேவர் சுரர்நரர்மெய்ம்மையில் வேதா விரிமிகு கீடாந்தத்துஅம்முறை யோனிபுக்கு ஆர்க்கும் சகலரே.
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்சத்துஅசத்து ஓடத் தனித்தனி பாசமும்மத்த இருள்சிவ னான கதிராலேதொத்தற விட்டிடச் சுத்தஆ வார்களே.
தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே.
அறிவின்றி முத்தன் அராகாதி சேரான்குறியொன்றி லாநித்தன் கூடான் காலதிசெறியும் செயலிலான் தினங்கற்ற வல்லோன்கிறியன் மலவியாபி கேவலம் தானே.
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்சந்தத ஞான பரையும் தனுச்சுத்திவிந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.
கேவல மாதியின் பேதம் கிளக்குறில்கேவல மூன்றும் கிளரும் சகலத்துள்ஆவயின் மூன்று மதிசுத்த மூடவேஓவலில் லாஒன்பான் ஒற்றுணர் வோர்கட்கே.
கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்கேவலத் தில்சகலங்கள் வயிந்தவம்கேவத் திறசுத்தம் கேடில்விஞ் ஞாகலர்க்குஆவயின் நாதன் அருண்மூர்த்தி தானே.
சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்சகல சகலமே சாக்கிர சாக்கிரம்சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தைசகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.
சுத்தத்தில் சுத்தமே தொல்சிவ மாகுதல்சுத்தத்தில் கேவலம் தொல்லுப சாந்தமாம்சுத்த சகலம் துரிய விலாசமாம்சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடுஞ்சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமேசாக்கிரா தீதம் தனிற்சுகா னந்தமேஆக்கு மறையாதி ஐம்மல பாசமே.
சாக்கிரா தீதத்தில் தானறும் ஆணவம்சாக்கிரா தீதம் பிராவத்தை தங்காதுஆக்கு பரோபதி யாஉப சாந்தத்தைநோக்கும் மலங்குணம் நோக்குதல் ஆகுமே.
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்சுத்த அதீதமும் தோன்றாமல் தானுணும்அத்தன் அருள்என்று அருளால் அறிந்தபின்சித்தமும் இல்லை செயல்இல்லை தானே.
எய்திய பெத்தமும் முத்தமும் என்பனஎய்தும் அரன்அரு ளேவிளை யாட்டோ டுஎய்திடு உயிர்சுத்தத் திடுநெறி என்னவேஎய்தும் உயிர்இறை பால்அறி வாமே.
ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்ஐம்மலத் தார்சுவர்க் கந்நெறி யான்பவர்ஐம்மலத் தார்அர னார்க்குஅறி வோரே.
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயைஅரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்துஅரிய கனாத்துலம் அந்தன வாமே.
ஆணவம் ஆகும் அதிதம்மேல் மாயையும்பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்பேணும் கனவும் மாமாயை திரோதாயிகாணும் நனவில் மலக்கலப்பு ஆகுமே.
அரன்முத லாக அறிவோன் அதீதத்தன்அரன்முத லாமாயை தங்கிச் சுழுனைகருமம் உணர்ந்து மாமாயைக் கைகொண்டோ ர்அருளும் அறைவார் சகலத்துற் றாரே.
உருவுற்றுப் போகமே போக்கியம் துற்றுமருவுற்றுப் பூதம னாதியான் மன்னிவரும்அச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக்கருவுற் றிடுஞ் சீவன் காணும் சகலத்தே.
இருவிடை ஒத்திட இன்னருள் சத்திமருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்குருவினைக்கொண்டருள் சத்திமுன் கூட்டிப்பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
ஆறாறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடுஈறாம் அதீதத் துரியத்து இவன்எய்தப்பேறான ஐவரும் போம்பிர காசத்துநீறார் பரம்சிவம் ஆதேய மாகுமே.
தன்னை அறியாது உடலைமுன் தான்என்றான்தன்னைமுன் கண்டான் துரியம் தனைக்கண்டான்உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்பின்னையும் வந்து பிறந்திடும் தானே.
சாக்கிரத் தன்னில் அதீதம் தலைப்படில்ஆக்கிய அந்த வயிந்தவம் ஆனந்தம்நோக்கும் பிறப்புஅறும் நோன்முத்தி சித்தியாம்வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.
அப்பும் அனலும் அகலத்து ளேவரும்அப்பும் அனலும் அகலத்து ளேவாராஅப்பும் அனலும் அகலத்துள் ஏதெனில்அப்பும் அனலும் கலந்ததுஅவ் வாறே.
அறுநான்கு அசுத்தம் அதிசுத்தா சுத்தம்உறும்ஏழு மாயை உடன்ஐந்தே சுத்தம்பெறுமாறு இவைமூன்றும் கண்டத்தால் பேதித்துஉறும்மாயை மாமாயை ஆன்மாவி னோடே.
மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிடஆய பரசிவன் தந்தையாய் நிற்கவேஏயும் உயிர்க்கே வலசகலத்து எய்திஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையுமே.
அஞ்சும் கடந்த அனாதி பரன்தெய்வம்நெஞ்சம தாய நிமலன் பிறப்பிலிவிஞ்சும் உடலுயிர் வேறு படுத்திடவஞ்சத் திருந்த வகையறிந் தேனே.
சத்தி பராபரம் சாந்தி தனிலானசத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்துசத்திய மாயை தனுச்சத்தி ஐந்துடன்சத்தி பெறுமுயிர் தான்அங்கத்து ஆறுமே.
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கேஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



