திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2272–2321

எட்டாம் தந்திரம் பாடல் 2272–2321 (50 பாடல்கள்)

அஞ்சொடு நான்கும் கடந்துஅக மேபுக்குப்பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்றவிஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடுநஞ்சுற நாடி நயம்செய்யு மாறே.

உரிய நனாத்துரி யத்தில் இவளாம்அரிய துரிய நனவாதி மூன்றில்பரிய பரதுரி யத்தில் பரனாம்திரிய வரும்துரி யத்தில் சிவமே.

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்பரமாம் அதீதம் பயிலப் பயிலப்பரமாம் அதீதம் பயிலாத் தபோதனார்பரமாகார் பாசமும் பற்றொன்றுஅ றாதே.

ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும்வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின்தூய அறிவு சிவானந்த மாகிப்போய்வேயும் பொருளாய் விளைந்தது தானே.

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டுநரிகளை ஓடத் துரத்திய நாதர்க்குஉரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே.

நின்றஇச் சாக்கிர நீள்துரி யத்தினின்மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்அன்றே இவனும் அவன்வடி வாமே.

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்இருந்த இடத்திடை ஈடான மாயைபொருந்தும் துரியம் புரியல்தா னாகும்தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

உன்னை அறியாது உடலைமுன் நான்ஒன்றாய்உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.

கருவரம்பு ஆகிய காயம் துரியம்இருவரும் கண்டீர் பிறப்புஇறப்பு உற்றார்குருவரம் பெற்றவர் கூடிய பின்னைஇருவரும் இன்றிஒன் றாகி நின் றாரே.

அணுவின் துரியத்தில் ஆன நனவும்அணுஅசை வின்கண் ஆனகனவும்அணுஅசை வில்பரா தீதம் கழுத்திபணியில் பரதுரி யம்பர மாமே.

பரதுரி யத்து நனவும் பரந்துவிரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்திஉருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பரமா நனவின்பின் பால்சக முண்டதிரமார் கனவும் சிறந்த சுழுத்திஉரமாம் உபசாந்தம் உற்றல் துறவேதரனாம் சிவதுரி யத்தனும் ஆமே.

சீவன் துரியம் முதலாகச் சீரானஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்தும்ஓவும் பராநந்தி உண்மைக்குள் வைகியேமேவிய நாலேழ் விடுவித்துநின் றானே.

பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்பரம்சிவன் மேலாம் பரநனவாகவிரிந்த கனாவிடர் வீட்டும் கழுமுனைஉரந்தரும் மாநந்தி யாம்உண்மை தானே.

சார்வாம் பரம்சிவன் சத்தி பரநாதம்மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்பாலாய்ப் பிரமன் அரிஅம ராபதிதேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே.

கலப்புஅறி யார்கடல் சூழ்உல கேழும்உலப்புஅறி யார்உட லோடுஉயிர் தன்மைஅலப்புஅறிந்து இங்குஅர சாளகி லாதார்குறிப்பது கோலம் அடலது வாமே.

பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்தன்னை அறியில் தயாபரன் எம்இறைமுன்னை அறிவு முடிகின்ற காலமும்என்னை அறியலுற்று இன்புற்ற வாறே.

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்தன்னின் மறைந்தது தன்கர ணங்களே.

மரத்தை மறைத்தது மாமத யானைமரத்தின் மறைந்தது மாமத யானைபரத்தை மறைத்தது பார்முதல் பூதம்பரத்தை மறைந்தது பார்முதல் பூதமே.

ஆறாறு ஆகன்று நமவிட்டு அறிவாகிவேறான தானே யகாரமாய் மிக்கோங்கிஈறார் பரையின் இருளற்ற தற்பரன்பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

துரியத்தில் ஓரைந்தும் சொல்அக ராதிவிரியப் பரையில் மிகும்நாதம் அந்தம்புரியப் பரையில் பராவத்தா போதம்திரிய பரமம் துரியம் தெரியவே.

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே.

ஐஐந்து மட்டுப் பகுதியும் மாயையும்பொய்கண்ட மாமாயை தானும் புருடன்கண்டுஎய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகிஉய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.

நின்றான் அருளும் பரமும்முன் நேயமும்ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்சென்றான் எனைவிடுத்து ஆங்கிச் செல்லாமையும்நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

சாத்திகம் எய்தும் நனவெனச் சாற்றுங்கால்வாய்ந்த இராசதம் மன்னும் கனவென்பஒய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்எறிகடல் ஏழின் மணல்அள வாகப்பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.

ஆனந்த தத்துவம் அண்டா சலத்தின்மேல்மேனிஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்க்தான்அந்த மில்லாத தத்துவம் ஆனவைஈனமி லா அண்டத்து எண்மடங்கு ஆமே.

அஞ்சில் அமுதும்ஓர் ஏழின்கண் ஆனந்தம்முஞ்சில்ஓங் காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்வஞ்சக மேநின்று வைத்திடில் காயமாம்கிஞ்சுகக் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

புருட னுடனே பொருந்திய சித்தம்அருவமொ டாறும் அதீதத் துரியம்விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்அரிய பதினொன்று மாம்அவ் அவத்தையே.

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்நாட்டி அழுத்திடின் நந்திஅல்லால் இல்லைஆட்டம்செய் யாத அதுவிதி யேநினைஈட்டு மதுதிடம் எண்ணலும் ஆமே.

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்மேவும் செலவு விடவரு நீக்கத்துப்பாவும் தனைக்கண்டால் மூன்றும் படர்வற்றதீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்செல்லும் அளவும் செலுத்துமிஹ் சிந்தையைஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துளவாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்ஆமையின் மேலும்ஓர் ஆயிரத்து ஆண்டே.

காலங்கி நீர்பூக் கலந்தஆ காயம்மாலங்கி ஈசன் பிரமன் சதாசிவன்மேலஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்காலனும் இல்லை கருத்தில்லை தானே.

ஆன்மாவே மைந்தன் ஆயினன் என்பதுதான்மா மறையறை தன்மை அறிகிலர்ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன்என்றால்ஆன்மாவும் இல்லையால் ஐஐந்தும் இல்லையே.

உதயம் அழுங்கில் ஒடுங்கல்இம் மூன்றின்கதிசாக் கிரங்கன வாதி சுழுத்திபதிதரு சேதனன் பற்றாம் துரியத்துஅதிசுப னாய்அனந் தான் அந்தி யாகுமே.

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகிநல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்பொல்லாத ஆறாறுள் போகாது போதமாய்ச்செல்லாச் சிவகதி சென்றுஎய்தும் அன்றே.

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே.

ஆன மறையாதி யாம் உரு நந்திவந்துஏனை அருள்செய் தெரிநனா அவத்தையில்ஆன வகையை விடும்அடைத் தாய்விடஆன மாலதீதம் அப்பரந் தானே.

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்அத்தன் அருள்நீங்கா ஆங்கணில் தானாகச்சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதிசெய்துஅத்தனோடு ஒன்றற்கு அருள்முத லாமே.

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகைவேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்வேறுசெய் யாஅருள் கேவலத் தேவிட்டுவேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

கறங்குஓலை கொள்ளிவட் டம்கட லில்திரைநிறஞ்சேர் ததிமத்தன் மலத்தே நின்றங்குஅறங்காண் சுவர்க்க நரகம் புவிசேர்த்துகிரங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

தானே சிவமான தன்மை தலைப்படஆன மலமும்அப் பாச பேதமும்ஆன குணமும் பரான்மா உபாதியும்பானுவின் முன்மதி போல்பலராவே.

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்குஅருக்கனும் சோமனும் அங்கே அமரும்திருத்தக்க மாலும் திசைமுகன் தானும்உருத்திர சோதியும் உள்ளத்து ளாரே.

ஆனைகள் ஐந்தம் அடங்கி அறிவென்னும்ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்குஊனை இருளற நோக்கும் ஒருவற்குவானகம் ஏற வழிஎளி தாமே.

ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்தாடித் தெழுந்த தமருக ஓசையும்பாடி எழுகின்ற வேதாக மங்களும்நாடியின் உள்ளாக நான்கண்ட வாறே.

முன்னை அறிவினில் செய்த முதுதவம்பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்தன்னை அறிவது அறிவாம் அஃ தன்றிப்பின்னை அறிவது பேயறி வாகுமே.

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே.

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்துஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

தொலையா அரனடி தோன்றும் அம் சத்திதொலையா இருளொளி தோற்ற அணுவும்தொலையாத் தொழின்ஞானம் தொன்மையில் நண்ணித்தொலையாத பெத்தம்முத் திக்கிடை தோயுமே.

எட்டாம் தந்திரம்பாடல் 2272

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout