தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்திமான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவைதான்தரு ஞானம் தன் சத்திக்குச் சாதனாம்ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கு ஒளி யாமே.
அறிகின்றி லாதன ஐஏழும் ஒன்றும்அறிகின்ற என்னை அறியா திருந்தேன்அறிகின்றாய் நீயென்று அருள்செய்தான் நந்திஅறிகின்ற நானென்று அறிந்துகொண் டேனே.
தான்அவ னாகிய ஞானத் தலைவனைவானவ ராதியை மாமணிச் சோதியைஈனமில் ஞானத்து இன்னருள் சத்தியைஊனமிலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.
ஒளியும் இருளும் பரையும் பரையுள்அளியது எனலாகும் ஆன்மாவை யன்றிஅளியும் அருளும் தெருளும் கடந்துதெளிய அருளே சிவானந்த மாமே.
ஆனந்த மாகும் அரனருட் சத்தியில்தான் அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்துஊன்அந்த மாய் உணர் வாய்உள் உணர்வுறில்கோன்அந்தம் வாய்க்கும் மகாவா கியமாமே.
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கேஅறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே.
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடிச்சித்தும் அசித்தும் சிவசித்த தாய்நிற்கும்சுத்தம் அசுத்தம் தொடங்காத துரியத்துச்சுத்தரா மூன்றுடன் சொல்லற் றவர்களே.
தானே அறியான் அறிவிலோன் தானல்லன்தானே அறிவான் அறிவு சதசத்தென்றுஆனால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.
தத்துவ ஞானம் தலைப்பட் டவர்க்கேதத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்தத்துவ ஞானத்துத் தான்அவ னாகவேதத்துவ ஞானானந் தந்தான் தொடங்குமே.
தன்னை அறிந்து சிவனுடன் தானாகமன்னும் மலம்குணம் மாளும் பிறப்பறும்பின்அது சன்முத்தி சன்மார்க்கப் பேரொளிநன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.
ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே.
உயிர்க்குஅறி உண்மை உயிர்இச்சை மானம்உயிர்க்குக் கிரியை உயிர்மாயை சூக்கம்உயிர்க்குஇவை ஊட்டுவோன் ஊட்டும் அவனேஉயிர்ச்சொல் அன்றி அவ்வுளத்து ளானே.
தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவசீவர்கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்பழியற்ற காரண காரியம் பாழ்விட்டுஅழிவற்ற சாந்தாதீ தன்சிவ னாமே.
இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகிஇல்லதம் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்சொல்வது சொல்லிடில் தூராகி தூரமென்றுஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயி ராகுமே.
உயிரிச்சை யூட்டி உழிதரும் சத்திஉயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்உயிரிச்சை யூட்டி யுடனுறலாலேஉயிரிச்சை வாட்டி உயர்பதஞ் சேருமே.
சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்ஓர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே.
எய்தினர் செய்யும் இருமாயா சத்தியின்எய்தினர் செய்யும் இருஞான சத்தியின்எய்தினர் செய்யும் இருஞால சத்தியின்எய்தினர் செய்யும் இறையருள் தானே.
திருந்தினர் விட்டார் திருவில் நரகம்திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்திருந்தினர் விட்டார் செறிமலர் கூட்டம்திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.
அவமும் சிவமும் அறியார் அறியார்அவமும் சிவமும் அறிவார் அறிவார்அவமும் சிவமும் அருளால் அறிந்தால்அவமும் சிவமும் அவனரு ளாமே.
அருளான சத்தி அனல் வெம்மை போலபொருள் அவனாகத்தான் போதம் புணரும்இருள் ஒளியாய் மீண்டு மும்மல மாகும்திருவருள் ஆனந்தி செம்பொருளாமே.
ஆதித்தன் தோன்ற வரும்பது மாதிகள்பேதித்த தவ்வினை யாற்செயல் சேதிப்பஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்பேதித்தப் பேதியா வாறுஅருட் பேதமே.
பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்போதம் புணர்போதம் போதமும் நாதமும்நாத முடன்நாக நாதாதி நாதமும்ஆதன் அருளின் அருள்இச்சை யாமே.
மேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்பாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதிபூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்ஆவியை நாட்டும் அரன்அரு ளாமே.
ஆறாது அகன்று தனையறிந் தானவன்ஈறாகி யாவினும் இயலாவும் தனில்எய்தவேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்தேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.
தீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தைமீண்டுற்று அருளால் விதிவழியே சென்றுதூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்சார்ந்தவர் நேயந் தலைப்ட்ட ஆனந்தர்சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.
தான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்தான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையத்தான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்தன்னினில் தன் ஐ அறியத் தலைப்படும்தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்தன்னினில் தன்ஐயும் சார்தற்கு அரியவே.
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னைஇருசுட ராகி இயற்றவல் லானும்ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.
மண்ஒன்று தான்பல நற்கலன் ஆயிடும்உள்கின்ற யோனிகட்டு எல்லாம் ஒருவனேகண்ஒன்று தான்பல காணும் தனைக்காணாஅண்ணலும் அவ்வண்ணம் ஆகிநின்றானே.
ஓம்புகின் றான்உலகு ஏழையும் உள்நின்றுகூம்புகின் றார்குணத் தின்னொடும் கூறுவர்தேம்புகின்றார்சிவன் சிந்தைசெய் யாதவர்கூம்பகில் லார்வந்து கொள்ளலும் ஆமே.
குறிஅறி யார்கள் குறிகாண மாட்டார்குறிஅறி யார்கடம் கூடல் பெரிதுகுறிஅறி யாவகை கூடுமின் கூடிஅறிவறி யாஇருந்து அன்னமும் ஆமே.
ஊனோ உயிரோ உறுகின்றது ஏதுஇன்பம்வானோர் தலைவி மயக்கத்து உறநிற்கத்தானோ பெரிதுஅறி வோம் என்னும் மானுடர்தானே பிறப்போடு இறப்பறி யாரே.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றான்தன்னை அறியும் அறிவை அறிந்தபின்தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
அங்கே அடற்பெரும் தேவரெல் லாம்தொழச்சிங்கா தனத்தே சிவன்இருந் தானென்றுசங்குஆர் வளையும் சிலம்பும் சரேலெனப்பொங்குஆர் குழலியும் போற்றிஎன் றாளே.
அறிவு வடிவென்று அறியாத என்னைஅறிவு வடிவென்று அருள்செய்தான் நந்திஅறிவு வடிவென்று அருளால் உணர்ந்தேஅறிவு வடிவென்று அருந்திருந் தானே.
அறிவுக்கு அழிவில்aல ஆக்கமும் இல்லைஅறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லைஅறிவே அறிவை அறிகின்றது என்றிட்டுஅறைகின் றனமறை ஈறுகள் தாமே.
ஆயு மலரின் அணிமலர் தன்மேலேபாய இதழ்கள் பதினாறும் அங்குளதூய அறிவு சிவானந்த மாகியேபோய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்துமுன்னிநின் றாமை மொழிந்தேன் முதல்வனும்பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்பின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.
அறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்அறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்அறிவுஅறி வாக அணிமாதி சித்திஅறிவுஅறி வாக அறிந்தணன் நந்தியே.
அறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்அறிவுஅறி யாமை யாரும் அறியார்அறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்அறிவுஅறி யாமை அழகிய வாறே.
அறிவுஅறி யாமையை நீவி யவனேபொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போதுஅறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்செறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.
அறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவதுஅறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவதுஅறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்அறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாதுஎன்னையிட்டு என்னை உசாவுகின் றானே.
மாய விளக்கது நின்று மறைந்திடும்தூய விளக்கது நின்று சுடர்விடும்காய விளக்கது நின்று கனன்றிடும்சேய விளக்கினைத் தேடுகின் றேனை.
தேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்நாடுகின் றேன்நல மேஉடை யானடிபாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்கூடுகின் றேன்குறை யாமனைத் தாலே.
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்தன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்மன்னிச் சிவமாக வாரா பிறப்பே.
வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்ஓதத் தகும்எட்டு யோகாநந்த அந்தமும்ஆதிக்க லாந்தமும் ஆறந்தம் ஆமே.
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்அந்தம்ஒர் ஆறும் அறிவார் அமலத்தர்அந்தம்ஓர் ஆறும் அறியார் அவர்தமக்குஅந்தமோடு ஆதி அறியஒண் ணாதே.
மூலப்பாடல் மட்டும் · original verses only



