திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 2122–2171

எட்டாம் தந்திரம் பாடல் 2122–2171 (50 பாடல்கள்)

காயப்பை ஒன்று சரக்குப் பலவுளமாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டுகாயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்சத்த பரிச ரூப ரசகந்தம்புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்ஒட்டிய பாசம் உணர்வுஅது வாகவேகட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதைமருவிய அத்தி வழும்பொடு மச்சைபரவிய சுக்கிலம் பாழாம் உபாதிஉருவ மலால்உடல் ஒன்றென லாமே.

ஆரே அறிவார் அடியின் பெருமையையாரே அறிவார் அங்கவர் நின்றதுயாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையையாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

எண்சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்கண்கால் உடலில் சுரக்கின்ற கைகளில்புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்கின்றநண்பால் உடம்பு தன் னால் உடம் பாமே.

உடம்புக்கும் நாலுக்கும் உயிராகிய சீவன்ஒடுங்கும் பரனோடு ஒழியாகப் பிரமம்கடந்தொறும் நின்ற கணக்கது காட்டிஅடங்கியே அற்றது ஆரறி வாறே.

ஆறுஅந்த மாகி நடுவுடன் கூடினால்தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்கூறுங் கலைகள் பதினெட்டும் கூடியேஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

மெய்யினில் தூல மிகுந்த முகத்தையும்பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்கையினில் துல்லியம் காட்டும் உடலையும்ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்சேய இடம்அண்மை செல்லவும் வல்லதுகாயத் துகிர் போர்வை ஒன்றுவிட்டு ஆங்குஒன்றிட்டுஏயும் அவரென்ன ஏய்ந்திடும் காயமே.

நாகம் உடல்உரி போலும்நல் அண்டசமாக நனாவில் கானாமறந் தல்லதுபோகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்றுஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே.

உண்டு நரக சுவர்கத்தில் உள்ளனகண்டு விடும்சூக்கம் காரண மாச்செலப்பண்டு தொடரப் பரகாய யோகிபோல்பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.

தான்அவ னாகிய தற்பரம் தாங்கினோன்ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

விஞ்ஞானத் தோர்க்குஆ ணவமே மிகுதனுஎஞ்ஞானத் தோர்க்குத் தனுமாயை தான்என்பஅஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனுவாகும்மெஞ்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

மலமென்று உடம்பை மதியாத ஊமர்தலமென்று வேறு தரித்தமை கண்டீர்நலமென்று இதனையே நாடி இருக்கில்பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் அண்டத்தே.

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்மெல்ல விளையாடும் விமலன் அகத்திலேஅல்ல செவிசத்த மாதி மனத்தையும்மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே.

பண்ணாக்கும் காமம் பயிலும் வசனமும்விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும்அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடிஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.

இலையாம் இடையில் எழுகின்ற காமம்முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத்தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.

ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்பொய்கண் டிலாத புருடன்இத யம் சுழுனைமெய்கண் டவன் உந்தி ஆகும் துரியமே.

முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச்செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகிஅப்பதி யாகும் நியதி முதலாகச்செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே.

இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரைமந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும் அந்தக்கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்பந்தஅச் சாக்கரப் பாலது ஆகுமே.

பாரது பொன்மை பசுமை உடையதுநீரது வெண்மை செம்மை நெருப்பதுகாரது மாருதம் கறுப்பை உடையதுவானகம் தூமம் மறைந்துநின் றாரே.

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலைஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடுஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனைபடுபர சேனையும் பாய்பரி ஐந்தும்உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர்அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவிஉடம்பிடை நின்ற உயிரை அறியார்உடம்பொடு உயிரிடை நட்புஅறி யாதார்மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

இருக்கின்ற வாறுஒன்று அறிகிலர் ஏழைகள்மருக்கும் அசபையை மாற்றி முகந்துகருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்துஉருக்கொண்டு தொக்க உடல்ஒழி யாதே.

ஒளித்திட்ட டிருக்கும் ஒருபதி னாலைஅளித்தவன் என்னுள்ளே ஆரியன் வந்துஅளிக்கும் கலைகளி னால்அறு பத்துஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

மண்ணினில் ஒன்று மலர்நீரும் மருங்காகும்பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓர்ஒன்றாய்உன்னின் முடிந்தது ஒருபூத சயமே.

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லைகன்னியைக் கன்னியே காதலித் தானே.

கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்றுஉண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்துஅண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே.

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்துஒன்றிய அங்தக் கரணங்கள் நான்குடன்மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனைகன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

தானம் இழந்து தனிபுக்கு இதயத்துமானம் அழிந்து மதிகெட்டு மாலாகிஆன விரிவுஅறி யாஅவ் வியத்தத்தில்மேனி அழிந்து கழுத்தியது ஆமே.

கழுமுனையைச் சேர்ந்துள மூன்றுடன் காட்சிகெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சிஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்துவிழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

தானத்து எழுந்து தருக்கு துரியத்தின்வானத்து எழுந்துபோய் வையம் பிறகிட்டுக்கானத்து எழுந்த கருத்தின் தலையிலேஊனத்து அவித்தைவிட்டு ஊமன்நின் றானே.

Yஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றதுநாமயம் அற்றது நாம்அறி யோமே.

துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளேநரிகள் பதினாலு நஞ்சுண்டு செத்தனபரிய புரவியும் பாறிப் பறந்ததுதுரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

மாறா மலம்ஐந்தால் மன்னும் அவத்தையில்வேறாய மாயா தநுகர ணாதிக்குஇங்குஈறாகா தேஎவ்வுயிரும் பிறந்துஇறந்துஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

உண்ணும்தன் ஊடாடது ஊட்டிடு மாயையும்அண்ணல் அருள்பெற்ற முத்தியது ஆவதுநண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்துஎண்னுறு ஞானத்தின் நேர்முத்தி எய்துமே.

அதிமூட நித்திரை ஆணவம் நந்தஅதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னிநிதமான கேவலம் இத்திறம் சென்றுபரமாகா ஐஅவத் தைப்படு வானே.

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்நேசாய ஈசனும் நீடுஆண வத்தரைஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

மஞ்சொடு மந்தா கினிகுட மாம்எனவிஞ்சுஅறி வில்லோன் விளம்பும் மிகுமதிஎஞ்சலில் ஒன்றெனு மாறுஎன இவ்வுடல்அஞ்சணும் மன்னன்அன் றேபோம் அளவே.

படியுடை மன்னவன் பாய்பரி ஏறிவடிவுடை மாநகர் தான்வரும் போதுஅடியுடை ஐவரும் அங்குஉறை வோரும்துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

நேரா மலத்தை நீடுஐந்து அவத்தையின்நேரான வாறுஉன்னி நீடு நனவினில்நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்துநேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயிசாக்கிர சொப்பனம் தன்னிடை மாமாயைசாக்கிரம் தன்னில் அழுத்திதற் காமியம்சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்நேய இராகாதி ஏய்ந்த துரியத்துத்தோயும் கழுமுனை கனாநனா வும்துன்னிஆயினன் அந்தச் சகலத்துஉ ளானே.

மேவிய அந்த கண் விழிகண் குருடனாம்ஆவயின் முன்அடிக் காணு மதுகண்டுமேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெறமூவயின் ஆன்மா முயலும் கருமமே.

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்ஒத்துஅங் கிருந்து உயிருண்ணு மாறுபோல்அத்தனும் ஐம்பொறி ஆடகத்துள் நின்றுசத்த முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

வைச்சன வச்சு வகையிரு பத்தஞ்சும்உச்சம் உடன்அணை வான்ஒரு வன்உளன்பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்றுநச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

எட்டாம் தந்திரம்பாடல் 2122

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com