திருமூலர் அருளிய திருமந்திரம்
12. அந்தணர் ஒழுக்கம்

முதல் தந்திரம் பாடல் 224–237 (14 பாடல்கள்)

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்போதாந்த மான பிரணவத் துள்புக்குநாதாந்த வேதாந்த போதாந்த நாதனைஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.

காயத் திரியே கருதுசா வித்திரிஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னிநேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே.

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்துகுருநெறி யாலுரை கூடிநால் வேதத்திருநெறி யான திருகை இருத்திச்சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்எய்த்தகும் இந்திய மீட்டியே வாட்டலும்ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்வேதாந்தங் கேட்டுஅவர் வேட்கைவிட் டாரே.

நூலும் சிகையும் நுவலின் பிரமமோநூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்நூலுடை அந்தணர் காண நுவலிலே.

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றிஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே.

மறையோது வாரே மறையவ ரானால்மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மைகுறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்றறிவோர் மறைதெரிந் தந்தண ராமே.

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவிநந்துதல் இல்லை நரபதி நன்றாகும்அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

வேதாந்த ஞானம் விளங்கும் விதியிலோர்நாதாந்த போதம் நணுகிய போக்கதுபோதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே.

ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவையுடை யோரே.

தானே விடும்பற் றிரண்டும் தரித்திடநானே விடப்படும் ஏதொன்றை நாடாதுபூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #224

1 / 14

0:000:00
12. அந்தணர் ஒழுக்கம்பாடல் 224

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com