கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிகநல்லன்கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.
நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறிநாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே.
வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமேவேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்வேடநெறி செய்தால் வீடது வாகுமே.
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே.
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணிஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மைஞானிக ளாலே நரபதி சோதித்துஞானமுண் டாக்குதல் நலமாம் நாட்டிற்கே.
ஆவையும் பாவையும் மற்றற வோரையும்தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்காவலன் காப்பவன் காவா தொழிவனேல்மேவும் மறுமைக்கு மீளா நரகமே.
திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.
வேந்தன் உலகை மிகநன்று காப்பதுவாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரைமேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.
தத்தம் சமயத் தகுதிநில் லாதாரைஅத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறிஎத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கேமெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #238
1 / 10




