திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 244

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

உரை

மறுபிறவி இல்லாத நிலையான முக்தியையும், இப்பிறவிக்குத் தேவையான செல்வங்களையும் விரும்பும் அரசன், மறந்த நிலையில் கூட தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும். ஏனெனில் நீர்சூழ்ந்த இந்த உலகில் அனைத்து உயிர்களும் செய்யும் செயல்களில் ஆறில் ஒரு பங்கு அரசனையே வந்தடையும். அவ்வுயிர்கள் செய்யும் புண்ணியங்களிலும் பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு தமக்கு வருமென்பதை உணர்ந்து, அரசன் ஒருபோதும் மறவாமல் தர்மத்தின் வழியிலேயே அவர்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

வரி வாரியாக

  • வரி 1

    மறுபிறவி இல்லாத நிலையான முக்தியையும், இப்பிறவிக்குத் தேவையான செல்வங்களையும் விரும்பும் அரசன்,

  • வரி 2

    மறந்த நிலையில் கூட தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும்.

  • வரி 3

    ஏனெனில் நீர்சூழ்ந்த இந்த உலகில் அனைத்து உயிர்களும் செய்யும் செயல்களில் ஆறில் ஒரு பங்கு அரசனையே வந்தடையும்.

  • வரி 4

    அவ்வுயிர்கள் செய்யும் புண்ணியங்களிலும் பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு தமக்கு வருமென்பதை உணர்ந்து, அரசன் ஒருபோதும் மறவாமல் தர்மத்தின் வழியிலேயே அவர்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

திருமந்திரம் பாடல் #244

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout