திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 243

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆவையும் பாவையும் மற்றற வோரையும்தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்காவலன் காப்பவன் காவா தொழிவனேல்மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

உரை

பால் தரும் பசுக்களையும் பெண்களையும் அறநெறி உணர்ந்த சான்றோரையும், வானுலகத் தேவர்களால் போற்றப்படும் ஞானத்தை உணர்ந்து அதற்குரிய வேடம் தரித்த ஞானிகளையும், அந்த நாட்டிற்குக் காவலனாக விளங்கும் அரசன் காத்துப் பாதுகாக்க வேண்டும். அவர்களைக் காக்காமல் விட்டுவிட்டால், அவன் இறந்தபின் மறுபிறவி எடுக்கவே முடியாத அளவிற்கு, எப்போதும் தப்பிக்க முடியாத நரகத்தில் துன்பப்பட்டுக் கிடப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    பால் தரும் பசுக்களையும் பெண்களையும் அறநெறி உணர்ந்த சான்றோரையும்,

  • வரி 2

    வானுலகத் தேவர்களால் போற்றப்படும் ஞானத்தை உணர்ந்து அதற்குரிய வேடம் தரித்த ஞானிகளையும்,

  • வரி 3

    அந்த நாட்டிற்குக் காவலனாக விளங்கும் அரசன் காத்துப் பாதுகாக்க வேண்டும்.

  • வரி 4

    அவர்களைக் காக்காமல் விட்டுவிட்டால், அவன் இறந்தபின் மறுபிறவி எடுக்கவே முடியாத அளவிற்கு, எப்போதும் தப்பிக்க முடியாத நரகத்தில் துன்பப்பட்டுக் கிடப்பான்.

திருமந்திரம் பாடல் #243

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout