தொடர்ந்து படிக்கread this section continuously
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணிஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மைஞானிக ளாலே நரபதி சோதித்துஞானமுண் டாக்குதல் நலமாம் நாட்டிற்கே.
உரைmeaning
உண்மை ஞானம் இல்லாதவர்கள் வெறும் சடைமுடியும் பூணூலும் தரித்து ஞானிகள் போல நடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு எப்போதும் சுபிட்சம் பெறாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கும். நடிப்பவர்கள் யாரென்று அந்நாட்டு அரசன் உண்மையான ஞானிகள் மூலம் சோதித்து அடையாளம் கண்டுகொண்டு, அதே உண்மையான ஞானிகள் மூலமே நடிப்பவர்களுக்கும் உண்மை ஞானத்தைப் போதிக்கச் செய்து அவர்களுக்கும் ஞானம் உண்டாக்கினால், அவனும் அவன் நாடும் எப்போதும் நலம் பெற்று இன்பமாக இருப்பர்.
Those without true wisdom merely wear matted locks and the sacred thread and act as though they were the wise. The land where such people live never attains prosperity and remains forever in suffering. If the king of that land has true sages test and identify who is merely acting, and through those same true sages has the actors themselves taught true wisdom, so that wisdom is instilled even in them, then he and his land will forever prosper in joy.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உண்மை ஞானம் இல்லாதவர்கள் வெறும் சடைமுடியும் பூணூலும் தரித்து ஞானிகள் போல நடிக்கின்றனர்.
Those without true wisdom merely wear matted locks and the sacred thread and act as though they were the wise.
- வரி 2Line 2
இப்படிப்பட்டவர்கள் வாழும் நாடு எப்போதும் சுபிட்சம் பெறாமல் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கும்.
The land where such people live never attains prosperity and remains forever in suffering.
- வரி 3Line 3
நடிப்பவர்கள் யாரென்று அந்நாட்டு அரசன் உண்மையான ஞானிகள் மூலம் சோதித்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
The king of that land must have true sages test and identify who is merely acting.
- வரி 4Line 4
அதே உண்மையான ஞானிகள் மூலமே நடிப்பவர்களுக்கும் உண்மை ஞானத்தைப் போதிக்கச் செய்து ஞானம் உண்டாக்கினால், அவனும் அவன் நாடும் எப்போதும் நலம் பெற்று இன்பமாக இருப்பர்.
If, through those same true sages, he has the actors themselves taught true wisdom, so that wisdom is instilled even in them, then he and his land will forever prosper in joy.
திருமந்திரம் பாடல் #242





