திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 241

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்பீடொன் றிலனாகும் ஆதலால் பேர்த்துணர்ந்தாடம் பரநூற் சிகையறுத் தானன்றே.

உரை

அறியாமை அகலாமல், உண்மை ஞானம் பெறாதவர்கள் குடுமியும் பூணூலும் அணிந்துகொள்வதால், அவர்கள் வாழும் நாட்டின் வளங்கள் குறைந்து துன்பமே மிஞ்சும். அந்த நாட்டை அரசாண்டு பெரு வாழ்வு வாழும் அரசனும் பெருமையற்றவனாக இழிவு பெற நேரிடும். ஆகவே, தன் நாட்டில் வெறும் ஆடம்பரத்திற்காகக் குடுமியும் பூணூலும் தரித்து வாழும் வேடதாரிகளை நாட்டை ஆளும் அரசன் நன்கு ஆராய்ந்து உணர்ந்துகொண்டு, அவர்களின் வேடத்தைக் கலைத்து, அவர்களை நம்புகின்ற மக்களுக்கு உண்மையை உணர்த்தினால், அந்த அரசனும் அவனது நாடும் நன்மை பெற்று விளங்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    அறியாமை அகலாமல், உண்மை ஞானம் பெறாதவர்கள் குடுமியும் பூணூலும் அணிந்துகொள்வதால், அவர்கள் வாழும் நாட்டின் வளங்கள் குறைந்து துன்பமே மிஞ்சும்.

  • வரி 2

    அந்த நாட்டை அரசாண்டு பெரு வாழ்வு வாழும் அரசனும் பெருமையற்றவனாக இழிவு பெற நேரிடும்.

  • வரி 3

    ஆகவே, தன் நாட்டில் வெறும் ஆடம்பரத்திற்காகக் குடுமியும் பூணூலும் தரித்து வாழும் வேடதாரிகளை நாட்டை ஆளும் அரசன் நன்கு ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

  • வரி 4

    அவர்களின் வேடத்தைக் கலைத்து, அவர்களை நம்புகின்ற மக்களுக்கு உண்மையை உணர்த்தினால், அந்த அரசனும் அவனது நாடும் நன்மை பெற்று விளங்கும்.

திருமந்திரம் பாடல் #241

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout