திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 245

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேந்தன் உலகை மிகநன்று காப்பதுவாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாங்கொள்ளப்பாய்ந்த புலியன்ன பாவம்அகத் தானே.

உரை

ஒரு நாட்டை ஆளும் அரசன் அதனை மிகவும் நன்றாகக் காத்து ஆட்சி செய்தால், அந்நாட்டு மக்களும் தாங்கள் ஏற்ற தொழில்களுக்கேற்ற தர்மநெறிகளிலிருந்து மாறாமல் நல்லவர்களாக விளங்குவர். பிறர் போரினாலோ சூழ்ச்சியினாலோ அவர்கள் வாழும் நாட்டைக் கைப்பற்ற நினைத்தால், புலி பதுங்கியிருந்து பாய்ந்து இரை தேடிக்கொள்வதைப் போலவே, போர்த் தொழில் கொண்ட மக்களும் நாட்டைக் காக்கும் அரசனும் பதுங்கியிருந்து தம் நாட்டைக் காப்பாற்றிக்கொள்வர்.

கருத்து: அரசன் தர்மவழியில் நாட்டை ஆட்சி செய்தால் மக்களும் தர்மவழியிலேயே நடப்பர்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒரு நாட்டை ஆளும் அரசன் அதனை மிகவும் நன்றாகக் காத்து ஆட்சி செய்தால்,

  • வரி 2

    அந்நாட்டு மக்களும் தாங்கள் ஏற்ற தொழில்களுக்கேற்ற தர்மநெறிகளிலிருந்து மாறாமல் நல்லவர்களாக விளங்குவர்.

  • வரி 3

    பிறர் போரினாலோ சூழ்ச்சியினாலோ அவர்கள் வாழும் நாட்டைக் கைப்பற்ற நினைத்தால், புலி பதுங்கியிருந்து பாய்ந்து இரை தேடிக்கொள்வதைப் போலவே,

  • வரி 4

    போர்த் தொழில் கொண்ட மக்களும் நாட்டைக் காக்கும் அரசனும் பதுங்கியிருந்து தம் நாட்டைக் காப்பாற்றிக்கொள்வர்.

திருமந்திரம் பாடல் #245

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout