திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 246

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரைமேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

உரை

பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளே அடக்கி, மூலாதாரத்தில் உறையும் குண்டலினியை சுழுமுனை நாடி வழியாக மூச்சின் துணையுடன் தலை உச்சிக்கு உயர்த்தி, சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனின் நிலவனைய திருமுகத்தை தரிசித்து, பின்னர் அந்தக் குண்டலினி சக்தியைப் புருவ நடுவே உள்ள ஆஞ்சை சக்கரத்திற்குக் கொண்டுவந்திறக்கி, அங்கு ஊறும் அமிர்தத்தை இறைவனை நினைந்து பருகாமல், மாறாக புத்தி மயக்கம் கொண்டு பனைமரத்திலிருந்து இறக்கிய கள்ளையே தினமும் பருகி மயக்கத்திலேயே திளைப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தக்க தண்டனை அளித்துத் திருத்துவது நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மூச்சுக்காற்றை உள்ளே அடக்கி, மூலாதாரத்தில் உறையும் குண்டலினியை சுழுமுனை நாடி வழியாக மூச்சின் துணையுடன் தலை உச்சிக்கு உயர்த்தி,

  • வரி 2

    சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனின் நிலவனைய திருமுகத்தை தரிசித்து, பின்னர் அந்தக் குண்டலினி சக்தியைப் புருவ நடுவே உள்ள ஆஞ்சை சக்கரத்திற்குக் கொண்டுவந்திறக்கி,

  • வரி 3

    அங்கு ஊறும் அமிர்தத்தை இறைவனை நினைந்து பருகாமல், மாறாக புத்தி மயக்கம் கொண்டு பனைமரத்திலிருந்து இறக்கிய கள்ளையே தினமும் பருகி,

  • வரி 4

    மயக்கத்திலேயே திளைப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தக்க தண்டனை அளித்துத் திருத்துவது நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

திருமந்திரம் பாடல் #246

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout