திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 247

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரைஅத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறிஎத்தண்ட மும்செயும் அம்மையில் இம்மைக்கேமெய்த்தண்டம் செய்வதுஅவ் வேந்தன் கடனே.

உரை

உயிர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின்படியும் ஒழுக்கத்தின்படியும் நடக்கத் தவறினால், அனைத்துச் சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் விளங்கும் சிவபெருமான், தாமே அருளிய சிவாகம நூல்நெறிக்கு ஏற்ப, எத்தகைய தண்டனையாயினும் அவர்களது ஆன்மாவிற்கு அடுத்த பிறவியில் கொடுத்து அவர்களைச் சீர்படுத்துவான். ஆனாலும் அவர்கள் இப்போது எடுத்திருக்கும் பிறவியில் அவர்களது உடலுக்குத் தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது, அந்த நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

குறிப்பு: இறைவன் ஏன் அடுத்த பிறவியில்தான் தண்டனை கொடுக்க வேண்டும், இப்பிறவியிலேயே கொடுத்தால் என்ன என்று பலர் கேட்பர். அதற்கான விடை: தவறுக்கேற்ற இறைவனின் தண்டனையை உடலளவிலும் மனஅளவிலும் தாங்கும் திறனை அந்த ஆன்மாவிற்கு அளித்து, தண்டனையைத் தாங்கும் அளவிற்கு அதைப் பக்குவப்படுத்திய பின்னரே இறைவன் தண்டனை அளிக்கிறான்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட சமய வழிகளின் நெறிமுறைகளின்படியும் ஒழுக்கத்தின்படியும் நடக்கத் தவறினால்,

  • வரி 2

    அனைத்துச் சமய வழிகளின் தலைவனாகவும் அனைத்து உயிர்களின் தந்தையாகவும் விளங்கும் சிவபெருமான், தாமே அருளிய சிவாகம நூல்நெறிக்கு ஏற்ப,

  • வரி 3

    எத்தகைய தண்டனையாயினும் அவர்களது ஆன்மாவிற்கு அடுத்த பிறவியில் கொடுத்து அவர்களைச் சீர்படுத்துவான்.

  • வரி 4

    ஆனாலும் அவர்கள் இப்போது எடுத்திருக்கும் பிறவியில் அவர்களது உடலுக்குத் தக்க தண்டனை கொடுத்துத் திருத்துவது, அந்த நாட்டை ஆளும் அரசனது கடமையாகும்.

திருமந்திரம் பாடல் #247

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout