திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 238

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிகநல்லன்கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.

உரை

கல்வியறிவு இல்லாத அரசனும் உயிர் கவரும் வேலையில் யமதர்மனுக்குச் சமமானவன். ஆயினும் கல்வியறிவு இல்லாத அரசனை விட யமதர்மனே மிகவும் நல்லவன். ஏனெனில் கல்வியறிவு இல்லாத அரசன் எது அறம், எது நீதி என்று ஆராயாமல், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டுவிடுவான். ஆனால் யமதர்மனோ நல்லவர்களை நெருங்கவும் தயங்கி, அவர்களுடைய காலம் முடியும்வரை காத்திருப்பான்.

வரி வாரியாக

  • வரி 1

    கல்வியறிவு இல்லாத அரசனும் உயிர் கவரும் வேலையில் யமதர்மனுக்குச் சமமானவன்.

  • வரி 2

    ஆயினும் கல்வியறிவு இல்லாத அரசனை விட யமதர்மனே மிகவும் நல்லவன்.

  • வரி 3

    ஏனெனில் கல்வியறிவு இல்லாத அரசன் எது அறம், எது நீதி என்று ஆராயாமல், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டுவிடுவான்.

  • வரி 4

    ஆனால் யமதர்மனோ நல்லவர்களை நெருங்கவும் தயங்கி, அவர்களுடைய காலம் முடியும்வரை காத்திருப்பான்.

திருமந்திரம் பாடல் #238

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout