தொடர்ந்து படிக்கread this section continuously
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்போதாந்த மான பிரணவத் துள்புக்குநாதாந்த வேதாந்த போதாந்த நாதனைஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.
உரைmeaning
அந்தணர்கள் எப்போதும் வேதங்களின் முடிவாக இருக்கும் வேதாந்தங்களைக் கேட்பதில் விருப்பத்துடன் இருக்க வேண்டும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களின் முடிவாக நிற்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகிய தத்துவமஸி (பரம்பொருள் நீயாக இருக்கிறாய் என்பது) என்பதை உணர்ந்து, ஒலியின் முடிவும் வேதத்தின் முடிவுமான இறைவனை "இவன் தான்" என்று தமக்குள் உணர்ந்து, பேரின்பத்திலேயே திளைத்திருப்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.
Brahmins must always hold, with longing, a wish to hear the Vedanta, which stands as the conclusion of the Vedas. Realising, within the Pranava mantra Om, which itself stands as the conclusion of the three works of creation, preservation and dissolution, its inner meaning, Tattvamasi (that the Supreme is you), and knowing within themselves that this same being is God, the end of sound and the end of the Vedas, and remaining ever immersed in supreme bliss: these alone are the true brahmins.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அந்தணர்கள் எப்போதும் வேதாந்தங்களைக் கேட்பதில் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.
Brahmins must always hold, with longing, a wish to hear the Vedanta.
- வரி 2Line 2
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களின் முடிவாக நிற்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகிய தத்துவமஸி (பரம்பொருள் நீயாக இருக்கிறாய் என்பது) என்பதை உணர்ந்து,
Realising, within the Pranava mantra Om, which stands as the conclusion of the three works of creation, preservation and dissolution, its inner meaning, Tattvamasi, that the Supreme is you,
- வரி 3Line 3
ஒலியின் முடிவும் வேதத்தின் முடிவுமான இறைவனை "இவன் தான்" என்று தமக்குள் உணர்ந்து,
and knowing within themselves that this same being, who is the end of sound and the end of the Vedas, is God,
- வரி 4Line 4
பேரின்பத்திலேயே திளைத்திருப்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.
and remaining ever immersed in supreme bliss: these alone are the true brahmins.
திருமந்திரம் பாடல் #225





