திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 226

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

காயத் திரியே கருதுசா வித்திரிஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னிநேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே.

உரை

காயத்ரி மந்திரத்தையும் சாவித்ரி மந்திரத்தையும் மனதில் வைத்து விருப்பத்துடன் ஆராய்ந்து அவற்றின் பொருளை உணர்ந்து, நாள்தோறும் அந்த மந்திரங்களையே மனதில் இருத்தித் தியானித்து, இறையருளால் உணர்ந்த அன்பு என்னும் தேரில் ஏறி, அன்பையே எப்போதும் தமது எண்ணத்தில் வைத்து, மாயையாகிய உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொள்ளாமல் வேதங்களின் முறைப்படி வாழ்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

குறிப்பு: காயத்ரி மந்திரத்தில் ஒரு எழுத்து நீக்கப்பட்ட மந்திரமே சாவித்திரி மந்திரம். ஞானிகளாலும் முனிவர்களாலும் யோகிகளாலும் மட்டுமே காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க இயலும்; ஏனெனில் அதை உச்சரிக்கும்போது உருவாகும் சக்திகளைச் சாதாரண மனிதர்களால் தாங்க முடியாது, அது உடல்நிலையையும் மனநிலையையும் பாதிக்கும். இன்று மனிதர்கள் சொல்லிவரும் காயத்ரி மந்திரம் என்பதே உண்மையில் சாவித்திரி மந்திரம்தான். இக்கலியுகத்தில் மனிதர்களின் உடல்நிலைக்கோ மனநிலைக்கோ எவ்வித பாதிப்பும் இன்றி இறைவனை அடையும்படி, இறையருளால் ஓர் எழுத்து நீக்கப்பட்டதே சாவித்திரி மந்திரம்.

வரி வாரியாக

  • வரி 1

    காயத்ரி மந்திரத்தையும் சாவித்ரி மந்திரத்தையும் மனதில் வைத்து விருப்பத்துடன் ஆராய்ந்து அவற்றின் பொருளை உணர்ந்து,

  • வரி 2

    நாள்தோறும் அந்த மந்திரங்களையே மனதில் இருத்தித் தியானித்து,

  • வரி 3

    இறையருளால் உணர்ந்த அன்பு என்னும் தேரில் ஏறி, அன்பையே எப்போதும் தமது எண்ணத்தில் வைத்து,

  • வரி 4

    மாயையாகிய உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொள்ளாமல் வேதங்களின் முறைப்படி வாழ்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #226

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout