திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 234

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவிநந்துதல் இல்லை நரபதி நன்றாகும்அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

உரை

காலையிலும் மாலையிலும் வேத முறைப்படி வேள்விகளை வளர்த்து, அனைத்து உயிர்களையும் அன்போடு இறைவனாகவே பார்க்கும் தண்மையுடன், உயர்ந்த வேதங்களையும் அவற்றின் பொருளான வேதாந்தங்களையும் எப்போதும் சிந்தனையில் வைத்துத் தியானிக்கும் அந்தணர்கள் வாழும் நாடு, செழுமையுடன் எல்லா வளங்களும் கொண்டு, பஞ்சமும் நோயும் இல்லாமல் எப்போதும் சீரும் சிறப்புமாக விளங்கும். அந்த நாட்டையும் மக்களையும் ஆளும் மன்னவரும் நலமுடன் இருப்பார்.

வரி வாரியாக

  • வரி 1

    காலையிலும் மாலையிலும் வேத முறைப்படி வேள்விகளை வளர்த்து, அனைத்து உயிர்களையும் அன்போடு இறைவனாகவே பார்க்கும் தண்மையுடன் இருந்து,

  • வரி 2

    உயர்ந்த வேதங்களையும் அவற்றின் பொருளான வேதாந்தங்களையும் எப்போதும் சிந்தனையில் வைத்துத் தியானிக்கும் அந்தணர்கள் வாழும் நாடு செழுமையுடன் எல்லா வளங்களும் கொண்டு விளங்கும்.

  • வரி 3

    பஞ்சமும் நோயும் இல்லாமல் எப்போதும் சீரும் சிறப்புமாக அந்நாடு விளங்கும்.

  • வரி 4

    அந்த நாட்டையும் மக்களையும் ஆளும் மன்னவரும் நலமுடன் இருப்பார்.

திருமந்திரம் பாடல் #234

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout