திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 229

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்வேதாந்தங் கேட்டுஅவர் வேட்கைவிட் டாரே.

உரை

இறைவன் அருளிய வேதாந்தங்களைக் கேட்க விரும்பிய அந்தணர்கள் அவற்றைக் கேட்ட பின்பும் தமக்கென இருக்கும் ஆசைப்பற்றுக்களை விட்டொழிக்காமல் இருக்கின்றனர். உலக ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு இறைவனை அடைவதே வேதாந்தத்தின் முடிவு. ஆசை ஒழிந்த இடமே வேதாந்தத்தின் முடிவு. வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவரே ஆசையை விட்டவராவார்.

கருத்து: வேதத்தைப் படித்து உணர்ந்து ஆசையை விட்டவரே அந்தணர் ஆவார்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் அருளிய வேதாந்தங்களைக் கேட்க விரும்பிய அந்தணர்கள்,

  • வரி 2

    அவற்றைக் கேட்ட பின்பும் தமக்கென இருக்கும் ஆசைப்பற்றுக்களை விட்டொழிக்காமல் இருக்கின்றனர்.

  • வரி 3

    உலக ஆசைகளையும் பற்றுக்களையும் விட்டு இறைவனை அடைவதே வேதாந்தத்தின் முடிவு; ஆசை ஒழிந்த இடமே வேதாந்தத்தின் முடிவு.

  • வரி 4

    வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவரே ஆசையை விட்டவராவார்.

திருமந்திரம் பாடல் #229

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout