திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 228

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்எய்த்தகும் இந்திய மீட்டியே வாட்டலும்ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

உரை

சத்தியத்தையும் தவத்தையும் இடைவிடாமல் காத்துப் பின்பற்றுவதும், தாமே இறைவன் என்று உணர்வதும், ஆசை வழியே செல்லும் ஐந்து இந்திரியங்களை -- கண் பார்த்தல், காது கேட்டல், மூக்கு நுகர்தல், வாய் பேசுதல், உடல் உணர்தல் -- ஆசை வழியில் போகாமல் தடுத்து அடக்கித் தாம் நினைத்தபடியே அவற்றை வேலை செய்ய வைப்பதும், உயிரும் உடலும் ஒன்றாக இருந்து உள்ளிருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து உலகப் பற்றுக்களை எல்லாம் அறுத்துவிடுவதும் -- இவையே ஒருவரைப் பிரம்மமாக்கிவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    சத்தியத்தையும் தவத்தையும் இடைவிடாமல் காத்துப் பின்பற்றுவதும், தாமே இறைவன் என்று உணர்வதும்,

  • வரி 2

    ஆசை வழியே செல்லும் ஐந்து இந்திரியங்களை -- கண் பார்த்தல், காது கேட்டல், மூக்கு நுகர்தல், வாய் பேசுதல், உடல் உணர்தல் -- ஆசை வழியில் போகாமல் தடுத்து அடக்குவதும்,

  • வரி 3

    தாம் நினைத்தபடியே அவற்றை வேலை செய்ய வைப்பதும், உயிரும் உடலும் ஒன்றாக இருந்து உள்ளிருப்பவன் இறைவனே என்பதை உணர்வதும்,

  • வரி 4

    உலகப் பற்றுக்களை எல்லாம் அறுத்துவிடுவதும் -- இவையே ஒருவரைப் பிரம்மமாக்கிவிடும்.

திருமந்திரம் பாடல் #228

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout