திருமூலர் அருளிய திருமந்திரம்
11. அக்கினி காரியம்

முதல் தந்திரம் பாடல் 214–223 (10 பாடல்கள்)

வசைஇல் விழுப்பொருள் வானும் நிலனும்திசையும் திசைபெறு தேவர் குழாமும்விசையம் பெருகிய வேத முதலாம்அசைஇல் அந்தணர் ஆகுதி வேட்கிலே.

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கிஅணைதுணை வைத்ததின் உட்பொரு ளானஇணைதுணை யாமத் தியங்கும் பொழுதுதுணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டுமாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்வேதிரண் டாகியே வெறிக்கின்ற வாறே.

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்றுமைநின் றெரியும் வகையறி வார்கட்குமைநின் றவிழ்தரும் அத்தினம் ஆமென்றும்செய்நின்ற செல்வமும் தீயுமது வாமே.

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டூழி அகலும் உறுவினை நோய்பலஆழி செய்தங்கி உதிக்க அவைவிழும்வீழி செய்துஅங்கி வினைசுடு மாமே.

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்தஅருஞ்செல்வந் தந்த தலைவனை நாடும்வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணிப்பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றாரே.

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்றகண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்தண்சுட ரோமத் தலைவனும் ஆமே.

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறைஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடற்கோமத்துள் அங்கி குரைகனலும் தானே.

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்தங்கி இருக்கும் வகையருள் செய்தவர்எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதிபொங்கி நிறுத்தும் புகழுமது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #214

1 / 10

0:000:00
11. அக்கினி காரியம்பாடல் 214

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com