தொடர்ந்து படிக்கread this section continuously
ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகிஎன் னுள்ளத் திருக்கின்றகண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்தண்சுட ரோமத் தலைவனும் ஆமே.
உரைmeaning
ஈடு இணையில்லாத அழகுபொருந்திய ஜோதியாக இருப்பவனும், அழிவு என ஒன்றில்லாத தலைவனும், நமது ஆன்மாவோடு இணைந்து நமது உள்ளத்திலேயே இருப்பவனும், நெற்றிக் கண்ணில் நெருப்பாக இருப்பவனும், ஏழு உலகங்களையும் கடந்து எங்கும் வியாபித்திருப்பவனும், குளிர்ந்த ஒளிதரும் நிலவைத் தன் சடையில் சூடியிருப்பவனும், முறையாகச் செய்யப்படும் ஹோமங்கள் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய எம்பெருமானே சதாசிவமூர்த்தி ஆவான்.
The one who is a peerless, beautiful flame, the lord in whom there is no such thing as destruction, the one who is joined with our soul and dwells within our own heart, the one who is fire in the eye upon his forehead, the one who transcends and pervades all seven worlds, the one who wears the cool, light-giving moon in his matted hair, and the lord of every homa performed according to the correct rites: this is our own Lord, Sadasivamurthy.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஈடு இணையில்லாத அழகுபொருந்திய ஜோதியாக இருப்பவனும், அழிவு என ஒன்றில்லாத தலைவனும்,
The one who is a peerless, beautiful flame, the lord in whom there is no such thing as destruction,
- வரி 2Line 2
நமது ஆன்மாவோடு இணைந்து நமது உள்ளத்திலேயே இருப்பவனும்,
the one who is joined with our soul and dwells within our own heart,
- வரி 3Line 3
நெற்றிக் கண்ணில் நெருப்பாக இருப்பவனும், ஏழு உலகங்களையும் கடந்து எங்கும் வியாபித்திருப்பவனும்,
the one who is fire in the eye upon his forehead, and who transcends and pervades all seven worlds,
- வரி 4Line 4
குளிர்ந்த ஒளிதரும் நிலவைத் தன் சடையில் சூடியிருப்பவனும், முறையாகச் செய்யப்படும் ஹோமங்கள் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய எம்பெருமானே சதாசிவமூர்த்தி ஆவான்.
the one who wears the cool, light-giving moon in his matted hair, and the lord of every homa performed according to the correct rites: this is our own Lord, Sadasivamurthy.
திருமந்திரம் பாடல் #221





