திருமூலர் அருளிய திருமந்திரம்
10. நல்குரவு

முதல் தந்திரம் பாடல் 209–213 (5 பாடல்கள்)

புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கைஅடையப்பட் டார்களும் அன்பில ரானார்கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லைநடையில்லை நாட்டில் இயங்குகின் றார்க்கே.

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற போதே.

கற்குழி தூரக் கனகமும் தேடுவார்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.

தொடர்ந்தெழும் சுற்றம் வினையினும் தீயகடந்ததோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

அறுத்தன ஆறினும் ஆனினம் மேவிஅறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வைவெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #209

1 / 5

0:000:00
10. நல்குரவுபாடல் 209

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com