திருமூலர் அருளிய திருமந்திரம்
9. மகளிரிழிவு

முதல் தந்திரம் பாடல் 204–208 (5 பாடல்கள்)

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்குலைநல வாங்கனி கொண்டுண லாகாமுலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்கனவது போலக் கசிந்தெழும் அன்பைநனவது போலவும் நாடவொண் ணாதே.

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும்மயலுறும் வானவர் சாரவிரும் என்பார்அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

வையகத் தேமட வாரொடும் கூடியென்மெய்யகத் தோருளம் வைத்த விதியதுகையகத் தேகரும் பாலையின் சாறுகொள்மெய்யகத் தேபெறு வேம்புஅது வாமே.

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.

திருமந்திரம் பாடல் #204

1 / 5

0:000:00
9. மகளிரிழிவுபாடல் 204

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout