திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 208

முதல் தந்திரம்9. மகளிரிழிவு

தொடர்ந்து படிக்கread this section continuously

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.

உரை

விளையும் பயிரை பாசி படிந்த குளத்தின் அடியில் நட்டால், அது விளையாமல் பாசியோடு பாசியாகி அழிந்துபோகும்; அதே குளத்தைப் பாசி நீக்கித் தூர்வாரி நீரைச் சேமித்தால், அந்த நீர் பெரும் விளைச்சலுக்கு உதவும். அதுபோலவே, இல்லறத்தின் மூலம் பிள்ளைகள் பெற்று சந்ததி வளர உதவும் விந்துவை, பொது மகளிரின்மேல் மோகம் கொண்டு அவர்களின் பாசி படிந்த கருவறைக்குள் நட்டுவைத்து அதில் இன்பம் காணுபவரை, உண்மை அறிவுள்ளவர்கள் தடுத்து அவர்களின் மயக்கத்தைப் போக்க முயலாவிட்டால், தம் குலமும் தம்மால் பிறக்க வேண்டிய நலமும் கெட்டு, பல இழிவுகள் ஏற்பட்டு, பின்பு அவர்கள் அழிந்தும் போவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    விளையும் பயிரை பாசி படிந்த குளத்தின் அடியில் நட்டால், அது விளையாமல் பாசியோடு பாசியாகி அழிந்துபோகும்; அதே குளத்தைப் பாசி நீக்கித் தூர்வாரி நீரைச் சேமித்தால், அந்த நீர் பெரும் விளைச்சலுக்கு உதவும்.

  • வரி 2

    அதுபோலவே, இல்லறத்தின் மூலம் பிள்ளைகள் பெற்று சந்ததி வளர உதவும் விந்துவை, பொது மகளிரின்மேல் மோகம் கொண்டு அவர்களின் பாசி படிந்த கருவறைக்குள் நட்டுவைத்து அதில் இன்பம் காணுபவரை,

  • வரி 3

    உண்மை அறிவுள்ளவர்கள் தடுத்து அவர்களின் மயக்கத்தைப் போக்க முயலாவிட்டால்,

  • வரி 4

    தம் குலமும் தம்மால் பிறக்க வேண்டிய நலமும் கெட்டு, பல இழிவுகள் ஏற்பட்டு, பின்பு அவர்கள் அழிந்தும் போவார்கள்.

திருமந்திரம் பாடல் #208

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout