ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறும் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
முதல் தந்திரம் பாடல் 201–203 (3 பாடல்கள்)
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியைஅருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்பொருத்த மிலாத புளிமாங்கொம் பேறிக்கருத்தறி யாதவர் காலற்ற வாறே.
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #201
1 / 3
0:000:00
8. பிறர்மனை நயவாமைபாடல் 201




