தொடர்ந்து படிக்கread this section continuously
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவேகாத்த மனையாளைக் காமுறும் காளையர்காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே.
உரைmeaning
எனக்கு இவள்தான் என்று உறுதிமொழி கூறித் திருமணம் செய்துகொண்ட அன்பான மனைவி தமது வீட்டிலேயே இருக்கும்போதும், வேறொருவர் திருமணம் செய்து பாதுகாத்து வைத்திருக்கும் மனைவியர் மேல் ஆசைப்படும் இளைஞர்கள், தமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காய்த்துப் பழுத்துத் தொங்கும் பலாப்பழத்தை உண்ண விரும்பாமல், முட்காட்டுச் செடிகளுக்கு நடுவே எங்கோ வளர்ந்திருக்கும் ஈச்சம்பழத்தை உண்ண ஆசைப்படுவதற்குச் சமமான முட்டாள்தனம் செய்கின்றனர்.
Even while their own loving wife, married with the pledge 'she alone is mine', is right there in their own home, young men who lust after another man's wife whom he married and keeps guarded are behaving like one who refuses to eat the ripe jackfruit hanging in his own backyard and instead longs painfully to eat the date-palm fruit growing somewhere amid thorny bushes, a plain foolishness.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எனக்கு இவள்தான் என்று உறுதிமொழி கூறித் திருமணம் செய்துகொண்ட அன்பான மனைவி தமது வீட்டிலேயே இருக்கும்போதும்,
Even while their own loving wife, married with the pledge 'she alone is mine', is right there in their own home,
- வரி 2Line 2
வேறொருவர் திருமணம் செய்து பாதுகாத்து வைத்திருக்கும் மனைவியர் மேல் ஆசைப்படும் இளைஞர்கள்,
young men who lust after another man's wife whom he married and keeps guarded
- வரி 3Line 3
தமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காய்த்துப் பழுத்துத் தொங்கும் பலாப்பழத்தை உண்ண விரும்பாமல்,
are behaving like one who refuses to eat the ripe jackfruit hanging in his own backyard
- வரி 4Line 4
முட்காட்டுச் செடிகளுக்கு நடுவே எங்கோ வளர்ந்திருக்கும் ஈச்சம்பழத்தை உண்ண ஆசைப்படுவதற்குச் சமமான முட்டாள்தனம் செய்கின்றனர்.
and instead longs painfully to eat the date-palm fruit growing somewhere amid thorny bushes, a plain foolishness.
திருமந்திரம் பாடல் #201





