திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 200

முதல் தந்திரம்7. புலால் மறுத்தல்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்மலைவான பாதக மாம்அவை நீக்கித்தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

உரை

பிற உயிர்களைக் கொல்லுதல், பிறரின் பொருட்களைத் திருடுதல், புத்தியை மயக்கும் கள்ளைக் குடித்தல் (மது அருந்துதல்), பெண்களின் மேல் காமவயப்படுதல், பொய் பேசுதல் ஆகிய இந்த ஐந்தும் உயிர்கள் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களாகும். இந்தப் பாவங்களைச் செய்யாமல், இறைவனது திருவடிகளைத் தமது சிந்தனையில் வைத்து இறைவனைப் பற்றிய எண்ணங்களிலேயே திளைத்திருப்பவர்களுக்குப் பேரறிவு ஞானத்தினால் விளங்கும் பேரின்பம் எப்போதும் கிடைக்கும்.

வரி வாரியாக

  • வரி 1

    பிற உயிர்களைக் கொல்லுதல், பிறரின் பொருட்களைத் திருடுதல், பெண்களின் மேல் காமவயப்படுதல், பொய் பேசுதல் ஆகியவை,

  • வரி 2

    புத்தியை மயக்கும் கள்ளைக் குடித்தலும் சேர்ந்து, இந்த ஐந்தும் உயிர்கள் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகப் பெரிய பாவங்களாகும்.

  • வரி 3

    இந்தப் பாவங்களைச் செய்யாமல், இறைவனது திருவடிகளைத் தமது சிந்தனையில் வைத்து இறைவனைப் பற்றிய எண்ணங்களிலேயே திளைத்திருப்பவர்களுக்கு,

  • வரி 4

    பேரறிவு ஞானத்தினால் விளங்கும் பேரின்பம் எப்போதும் கிடைக்கும்.

திருமந்திரம் பாடல் #200

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout