தொடர்ந்து படிக்கread this section continuously
தொடர்ந்தெழும் சுற்றம் வினையினும் தீயகடந்ததோர் ஆவி கழிவதன் முன்னேஉடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.
உரைmeaning
உயிர்கள் இவ்வுலகில் பிறக்கும்போதே, முன்பிறவிகளிலிருந்து தொடர்ந்துவரும் வினைகளும் கூடவே பிறந்து, அந்த உயிரைச் சூழ்ந்த ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகளாக எப்போதும் இருக்கின்றன. உயிரின் வாழ்க்கை கடந்து முடிவதற்கு முன்பே, உலகப் பற்றுகளிலிருந்து விடுபட வேண்டும். தமக்குள் இருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு, தமது உள்ளுக்குள்ளேயே இறைவனை ஜோதியாக உணர்ந்து, ஆன்மாவின் இருளை அகற்றும் விளக்காக அதை ஏற்றிவைக்க வேண்டும். அது காட்டும் வழியில் எப்போதும் மாறாமல் நின்று வந்தால், பொய்யான வயிற்றுப் பசியோடு பிறக்கும் பிறவிகளும் இனி இல்லாமல் போய்விடும்.
The very moment living beings are born into this world, the karmic deeds carried forward from their earlier births are born along with them, remaining always as the impurities of anava, karma and maya surrounding that soul. Before the soul's life passes and ends, one must break free from worldly attachments. One must praise, glorify and worship the God who dwells within, realise God as a flame within one's own inmost being, and kindle it as the lamp that dispels the soul's darkness. If one stands always, unwavering, on the path that lamp reveals, the births that come with the false hunger of the belly will no longer occur.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் இவ்வுலகில் பிறக்கும்போதே, முன்பிறவிகளிலிருந்து தொடர்ந்துவரும் வினைகளும் கூடவே பிறந்து, அந்த உயிரைச் சூழ்ந்த ஆணவம், கன்மம், மாயை என்னும் அழுக்குகளாக எப்போதும் இருக்கின்றன.
The very moment living beings are born into this world, the karmic deeds carried forward from their earlier births are born along with them, remaining always as the impurities of anava, karma and maya surrounding that soul.
- வரி 2Line 2
உயிரின் வாழ்க்கை கடந்து முடிவதற்கு முன்பே, உலகப் பற்றுகளிலிருந்து விடுபட வேண்டும்.
Before the soul's life passes and ends, one must break free from worldly attachments.
- வரி 3Line 3
தமக்குள் இருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு, தமது உள்ளுக்குள்ளேயே இறைவனை ஜோதியாக உணர்ந்து, ஆன்மாவின் இருளை அகற்றும் விளக்காக அதை ஏற்றிவைக்க வேண்டும்.
One must praise, glorify and worship the God who dwells within, realise God as a flame within one's own inmost being, and kindle it as the lamp that dispels the soul's darkness.
- வரி 4Line 4
அது காட்டும் வழியில் எப்போதும் மாறாமல் நின்று வந்தால், பொய்யான வயிற்றுப் பசியோடு பிறக்கும் பிறவிகளும் இனி இல்லாமல் போய்விடும்.
If one stands always, unwavering, on the path that lamp reveals, the births that come with the false hunger of the belly will no longer occur.
திருமந்திரம் பாடல் #212





