திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 211

முதல் தந்திரம்10. நல்குரவு

தொடர்ந்து படிக்கread this section continuously

கற்குழி தூரக் கனகமும் தேடுவார்அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியதுஅக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்அக்குழி தூரும் அழுக்குஅற்ற வாறே.

உரை

கல்லால் ஆன குழியை மூட தங்கக் கட்டிகளைத் தேடுவது போல, தினமும் ஏற்படும் பசிக்காகப் பலவித செல்வங்களைத் தேடுகின்றன உயிர்கள். கல்லால் ஆன குழியைத் தங்கத்தால் நிரப்ப முடியாதது போலவே, வயிற்றுப் பசியையும் எத்தனை வகையான செல்வம் சேர்த்தாலும் நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது; இதை அறிவது யாவர்க்கும் அரிது. நிரந்தரமாகப் பசியைத் தீர்ப்பது எப்படி என்னும் அறிவை அறிந்துகொள்ளுங்கள். அந்த அறிவைத் தெரிந்துகொண்டுவிட்டால், இனி எப்போதும் பசி வாராதவாறு ஆன்மாவின் அனைத்து அழுக்குகளும் நீங்கி, பிறவியில்லாப் பெருவாழ்வு கிடைத்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    கல்லால் ஆன குழியை மூட தங்கக் கட்டிகளைத் தேடுவது போல, தினமும் ஏற்படும் பசிக்காகப் பலவித செல்வங்களைத் தேடுகின்றன உயிர்கள்.

  • வரி 2

    கல்லால் ஆன குழியைத் தங்கத்தால் நிரப்ப முடியாதது போலவே, வயிற்றுப் பசியையும் எத்தனை வகையான செல்வம் சேர்த்தாலும் நிரந்தரமாகத் தீர்த்துவிட முடியாது; இதை அறிவது யாவர்க்கும் அரிது.

  • வரி 3

    நிரந்தரமாகப் பசியைத் தீர்ப்பது எப்படி என்னும் அறிவை அறிந்துகொள்ளுங்கள்.

  • வரி 4

    அந்த அறிவைத் தெரிந்துகொண்டுவிட்டால், இனி எப்போதும் பசி வாராதவாறு ஆன்மாவின் அனைத்து அழுக்குகளும் நீங்கி, பிறவியில்லாப் பெருவாழ்வு கிடைத்துவிடும்.

திருமந்திரம் பாடல் #211

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout