திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 216

முதல் தந்திரம்11. அக்கினி காரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கிஅணைதுணை வைத்ததின் உட்பொரு ளானஇணைதுணை யாமத் தியங்கும் பொழுதுதுணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

உரை

உயிர்களைக் காத்துக்கொண்டு, அவற்றின் துணையாகக் கூடவே இருப்பது, அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினுள் ஜோதியாக இருக்கும் இறைவனே. உயிர்களைக் காத்துத் துணையாக இருக்கும் அந்த இறைவனின் அருள் வேண்டி, அந்தணர்கள் வேள்விகளை முறையாகச் செய்யவேண்டும். முறையாகச் செய்யப்படும் வேள்வியில் இருக்கும் இறைவனுடன் ஹோமத் தீ இணைந்து வளரும்போது, அதன் பயனாகக் கிடைக்கும் இறையருளே உயிர்களுக்குத் துணையாக இருந்து, அவர்களை முக்தி பெறும் தூய்மையான வழியில் நடத்திச் சென்று, முக்தியையும் அளித்துவிடும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களைக் காத்துக்கொண்டு, அவற்றின் துணையாகக் கூடவே இருப்பது, அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினுள் ஜோதியாக இருக்கும் இறைவனே.

  • வரி 2

    உயிர்களைக் காத்துத் துணையாக இருக்கும் அந்த இறைவனின் அருள் வேண்டி, அந்தணர்கள் வேள்விகளை முறையாகச் செய்யவேண்டும்.

  • வரி 3

    முறையாகச் செய்யப்படும் வேள்வியில் இருக்கும் இறைவனுடன் ஹோமத் தீ இணைந்து வளரும்போது,

  • வரி 4

    அதன் பயனாகக் கிடைக்கும் இறையருளே உயிர்களுக்குத் துணையாக இருந்து, அவர்களை முக்தி பெறும் தூய்மையான வழியில் நடத்திச் சென்று, முக்தியையும் அளித்துவிடும்.

திருமந்திரம் பாடல் #216

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout