திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 215

முதல் தந்திரம்11. அக்கினி காரியம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்போகதி நாடிப் புறங்கொடுத்து உண்ணுவர்தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறிதாமறி வாலே தலைப்பட்ட வாறே.

உரை

அரிய பொக்கிஷமான வேதங்களை முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்க்கும் அந்தணர்கள், தமது முக்திக்கு வழி தேடி ஹோமம் செய்து பெற்றதைப் பிறருக்கும் கொடுத்து, மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழ்வார்கள். அப்படி வாழும் அந்தணர்கள், இறைவனை அடையக்கூடிய வாழ்க்கை முறையான உண்மை நெறிப் பாதையை, தாம் தவறாமல் செய்த ஹோமத்தின் பயனாலேயே அறிந்துகொண்டு, அதன்படியே வாழ்ந்து முக்தி அடைவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அரிய பொக்கிஷமான வேதங்களை முறையாக மந்திரங்கள் ஓதி ஹோமத் தீயை வளர்க்கும் அந்தணர்கள்,

  • வரி 2

    தமது முக்திக்கு வழி தேடி ஹோமம் செய்து பெற்றதைப் பிறருக்கும் கொடுத்து, மிஞ்சியதை மட்டுமே உண்டு வாழ்வார்கள்.

  • வரி 3

    அப்படி வாழும் அந்தணர்கள், இறைவனை அடையக்கூடிய வாழ்க்கை முறையான உண்மை நெறிப் பாதையை,

  • வரி 4

    தாம் தவறாமல் செய்த ஹோமத்தின் பயனாலேயே அறிந்துகொண்டு, அதன்படியே வாழ்ந்து முக்தி அடைவார்கள்.

திருமந்திரம் பாடல் #215

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout