தொடர்ந்து படிக்கread this section continuously
நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்றுமைநின் றெரியும் வகையறி வார்கட்குமைநின் றவிழ்தரும் அத்தினம் ஆமென்றும்செய்நின்ற செல்வமும் தீயுமது வாமே.
உரைmeaning
யாகத்தில் இடும் நெய்யில் பற்றி எரியும் பெரிய நெருப்பினுள் இருக்கும் இறைவனின் அருளைக்கொண்டு, தமது ஆன்ம இருளாகிய மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்து முக்தி பெறும் விதத்தை அறிந்தவர்களுக்கு, இருளை நீக்கும் இரத்தினம் போல, வேள்வி செய்பவர்களின் உள்ளிருந்து மும்மல இருளை நீக்கி அவர்களை முக்தி பெறச் செய்யும், மாபெரும் செல்வம், அவர்கள் வளர்த்த ஹோமத் தீயே ஆகும்.
By the grace of God present within the great fire that burns catching on the ghee offered in the yagna, those who have come to know the way of burning away the three malas, anava, karma and maya, the darkness of their own soul, and attaining liberation, find that, like a gem that dispels darkness, removing the darkness of the three malas from within those who perform the yagna and bringing them to liberation, is the great wealth of the very homa fire that they tended.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
யாகத்தில் இடும் நெய்யில் பற்றி எரியும் பெரிய நெருப்பினுள் இருக்கும் இறைவனின் அருளைக்கொண்டு,
By the grace of God present within the great fire that burns catching on the ghee offered in the yagna,
- வரி 2Line 2
தமது ஆன்ம இருளாகிய மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) எரித்து முக்தி பெறும் விதத்தை அறிந்தவர்களுக்கு,
those who have come to know the way of burning away the three malas, anava, karma and maya, the darkness of their own soul, and attaining liberation, find that,
- வரி 3Line 3
இருளை நீக்கும் இரத்தினம் போல, வேள்வி செய்பவர்களின் உள்ளிருந்து மும்மல இருளை நீக்கி அவர்களை முக்தி பெறச் செய்யும்,
like a gem that dispels darkness, removing the darkness of the three malas from within those who perform the yagna and bringing them to liberation,
- வரி 4Line 4
மாபெரும் செல்வம், அவர்கள் வளர்த்த ஹோமத் தீயே ஆகும்.
is the great wealth of the very homa fire that they tended.
திருமந்திரம் பாடல் #218





