திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 236

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்றும் இரண்டும் ஒடுங்கிய காலத்துநன்றும் இருந்தும் நலம்பல பேசினும்வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்சென்று வணங்குந் திருவையுடை யோரே.

உரை

எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றும் அமைதியாக ஒடுங்கியிருக்கும் காலத்திலும், அவை மூன்றும் தத்தம் வேலையைச் செய்துகொண்டிருக்கும் காலத்திலும், எல்லாவற்றிற்குள்ளும் இருந்து எல்லாவற்றையும் வென்று விளங்கும் இறைவனையே தியானித்திருப்பவர்கள் -- இவர்களைத் தேடிப் பிறர் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று வணங்குமளவு இறைவனின் திருவருளைப் பெறுபவர்கள் -- அந்தணர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றும் அமைதியாக ஒடுங்கியிருக்கும் காலத்திலும், அவை மூன்றும் தத்தம் வேலையைச் செய்துகொண்டிருக்கும் காலத்திலும்,

  • வரி 2

    எல்லாவற்றிற்குள்ளும் இருந்து எல்லாவற்றையும் வென்று விளங்கும் இறைவனையே தியானித்திருப்பவர்கள்,

  • வரி 3

    இவர்களைத் தேடிப் பிறர் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று வணங்குமளவு,

  • வரி 4

    இறைவனின் திருவருளைப் பெறுபவர்கள் அந்தணர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #236

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout