திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 232

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்துகரும நியமாதி கைவிட்டுக் காணும்துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே.

உரை

அறிந்த கருத்துக்களான சித்தாந்தமும் அறியாத கருத்துக்களான அசித்தாந்தமும் இல்லாத குரு காட்டிய வழியில் குருவின் பாதங்களைச் சரணடைந்து, தினந்தோறும் செய்யும் கர்மங்களையும் நியமங்களையும் விட்டுவிட்டு, வெளியுலகைக் காணாமல் தமக்குள்ளேயே தியானித்து, சமாதி நிலைகளில் நான்காவதான துரிய சமாதி நிலையை -- அனைத்தையும் இறைவனாகவே காணும் நிலை -- அடைந்திருப்பவர்களே தூய வேதங்களின் வழியில் வாழும் அந்தணர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    அறிந்த கருத்துக்களான சித்தாந்தமும் அறியாத கருத்துக்களான அசித்தாந்தமும் இல்லாத குரு காட்டிய வழியில் குருவின் பாதங்களைச் சரணடைந்து,

  • வரி 2

    தினந்தோறும் செய்யும் கர்மங்களையும் நியமங்களையும் விட்டுவிட்டு, குருபதம் சேர்ந்து,

  • வரி 3

    வெளியுலகைக் காணாமல் தமக்குள்ளேயே தியானித்து,

  • வரி 4

    சமாதி நிலைகளில் நான்காவதான துரிய சமாதி நிலையை -- அனைத்தையும் இறைவனாகவே காணும் நிலை -- அடைந்திருப்பவர்களே தூய வேதங்களின் வழியில் வாழும் அந்தணர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #232

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout