திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 231

முதல் தந்திரம்12. அந்தணர் ஒழுக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றிஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

உரை

சத்தியத்தின் வழி நடவாமலும், தன்னை உணரும் ஞானம் இல்லாமலும், உடலோடு பிறந்த இந்திரியங்களின் வழி வரும் ஆசைகளை விட்டு விலகாமலும், உண்மையான மெய்ஞான உணர்வு இல்லாமலும், இறைவன் மேல் பக்தி இல்லாமலும், உண்மைப் பொருள் இறைவன் ஒருவனே என்பதை உணராமலும், நிலையில்லாத உடலின் மேல் கொண்ட ஆசையினால் இந்திரியங்கள் வழியே வாழும் மூடர்கள், தம்மைப் பிராமணர் என்று கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சத்தியத்தின் வழி நடவாமலும், தன்னை உணரும் ஞானம் இல்லாமலும்,

  • வரி 2

    உடலோடு பிறந்த இந்திரியங்களின் வழி வரும் ஆசைகளை விட்டு விலகாமலும், உண்மையான மெய்ஞான உணர்வு இல்லாமலும்,

  • வரி 3

    இறைவன் மேல் பக்தி இல்லாமலும், உண்மைப் பொருள் இறைவன் ஒருவனே என்பதை உணராமலும்,

  • வரி 4

    நிலையில்லாத உடலின் மேல் கொண்ட ஆசையினால் இந்திரியங்கள் வழியே வாழும் மூடர்கள், தம்மைப் பிராமணர் என்று கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #231

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout