கழுநீர்ப் பசுப்பெறிற் பின் கயந்தேராகழுநீர் விடாய்த்துத்தங் காயம் சுருக்கும்முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்செழுநீர்ச் சிவன்றன் ஆனந்தத் தேறலே.
சித்தம் உருக்கிச் சிவமாம் சமாதியில்ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்சுத்த மதுவுண்ணச் சுவானந்தம் விட்டுநித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்மைக் காலே.
காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்மாமல முஞ்சம யத்துள் மயலுறும்போமதி யாகும் புனிதன் இணையடிஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்காமத்தோர் காமக்கள் ளுண்டே மயங்குவர்ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்நாமத்தோர் அண்ணலை நணுகுவர் தாமே.
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்கள்ளுண்ணும் மாந்தர் கருத்துஅறி யாரே.
மயக்குஞ் சமய மலமன்னு மூடர்மயக்கு மதுவுண்ணு மாமூடர் தேரார்மயக்குறு மாயையின் மாமாயை வீடுமயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
மயக்கும் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்இயங்கும் மடவார்தம் இன்பமே எய்திமுயங்கும் நயங்கொண்ட ஞானத்து முந்திஇயங்கும் இடையறா ஆனந்தம் எய்தே.
இராப்பகல் அற்ற இடத்தே இருந்துபராக்கற ஆனந்தத் தேறல் பருகார்இராப்பகல் அற்ற இறையடி இன்பத்திராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.
சத்தன் அருள்தரின் சத்தி அருளுண்டாம்சத்தி அருள்தரின் சத்தன் அருளுண்டாம்சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியேமெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்போத அமுதைப் பொசித்தவர் எண்சித்திமோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்றாகும் மதத்தால் அறிவுஅழிந் தாரே.
உண்ணீர் அமுதம் உறுமூ றலைத்திறந்தெண்ணீர் குரவன் இணையடித் தாமரைநண்ணீர் சமாதியி னாடிநீ ரானலங்கண்ணா றொடேசென்று கால்வழி காணுமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #324
1 / 13




