திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 327

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்காமத்தோர் காமக்கள் ளுண்டே மயங்குவர்ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்நாமத்தோர் அண்ணலை நணுகுவர் தாமே.

உரை

தீவினையைச் செய்பவர்கள், தமக்கும் தீயதாகிய மதுவைக் குடித்துக் குடித்து அழிந்து போவார்கள். காம எண்ணம் கொண்டவர்கள், அந்தக் காமத்தையே மதுவாகக் குடித்து அதிலேயே மயங்கிக் கிடப்பார்கள். அப்படி இல்லாமல், தவ வழியில் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபடுபவர்கள், தமக்குள்ளேயே பேரொளியாக இறைவனின் பேரானந்தத்தை உணர்வார்கள். இறைவனது திருநாமத்தை மட்டுமே எப்போதும் சிந்தித்து ஓதிக்கொண்டே இருப்பவர்கள், இறைவனோடு பேரானந்தத்தில் கலந்துவிடுவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தீவினையைச் செய்பவர்கள், தமக்கும் தீயதாகிய மதுவைக் குடித்துக் குடித்து அழிந்து போவார்கள்.

  • வரி 2

    காம எண்ணம் கொண்டவர்கள், அந்தக் காமத்தையே மதுவாகக் குடித்து அதிலேயே மயங்கிக் கிடப்பார்கள்.

  • வரி 3

    அப்படி இல்லாமல், தவ வழியில் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபடுபவர்கள், தமக்குள்ளேயே பேரொளியாக இறைவனின் பேரானந்தத்தை உணர்வார்கள்.

  • வரி 4

    இறைவனது திருநாமத்தை மட்டுமே எப்போதும் சிந்தித்து ஓதிக்கொண்டே இருப்பவர்கள், இறைவனோடு பேரானந்தத்தில் கலந்துவிடுவார்கள்.

திருமந்திரம் பாடல் #327

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout