திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 332

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்சத்திய ஞானவா னந்தத்திற் சார்தலே.

உரை

தேவியை வணங்குபவர்களில் சிலர், அவள் அருளைப் பெற்று மந்திர தந்திர சக்தி அடைய வேண்டும் என்று மதுவைப் படைத்து, பின்பு அதை அருந்துகின்றனர். மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள். தம்மை மறந்ததால் அவர்களுடைய ஆற்றல் அழியும். அருள் சக்தி என்பது, இறைவன் மேல் எண்ணத்தை வைத்துச் சிவஞானத்தை அறிந்து, அதில் நிலைபெற்று உண்மை ஞானத்தை அடைவதே ஆகும்.

வரி வாரியாக

  • வரி 1

    தேவியை வணங்குபவர்களில் சிலர், அவள் அருளைப் பெற்று மந்திர தந்திர சக்தி அடைய வேண்டும் என்று மதுவைப் படைத்து, பின்பு அதை அருந்துகின்றனர்.

  • வரி 2

    மது அருந்துவோர் தம்மை மறப்பார்கள்; தம்மை மறந்ததால் அவர்களுடைய ஆற்றல் அழியும்.

  • வரி 3

    அருள் சக்தி என்பது, இறைவன் மேல் எண்ணத்தை வைத்துச் சிவஞானத்தை அறிந்து அதில் நிலைபெறுவதே.

  • வரி 4

    அவ்வாறு நிலைபெற்று உண்மை ஞானத்தை அடைவதே அருள் சக்தி ஆகும்.

திருமந்திரம் பாடல் #332

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout